2025 மார்ச் 06, வியாழக்கிழமை

மன்னாரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்ற நிலையில், இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மட்டும் 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மேலும், இந்த வருடத்தில் மொத்தம் 967 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மொத்தம் 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மொத்தமாக 6 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 40 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த தொற்றானது சாதாரண நிலையில் காணப்பட்டாலும் கூட ஒரு சமூகத்தில் மிகவும்,குறுகிய காலத்தில் பரவும் போது திறிபடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

இவ்வாறு திறிபடைந்தால் வீரியம் கூடிய வைரஸ் ஒன்று இந்த சமூகத்தில் உறுவாகி பரவினால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது.

பொது மக்கள் இவ்வாறான சூழ்நிலையில் கட்டாயம் முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

இதேவேளை, கடந்த வருடத்தின் இறுதியில் தொடங்கிய டெங்கின் தாக்கம் இந்த வருட ஆரம்பத்திலும் காணப்பட்டது.

இந்த வருடத்தின் தற்போது வரை 177 டெங்கு  நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் மன்னார் தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தற்போது டெங்கு நுளம்பின் தாக்கம் குறைவடைந்திருந்தாலும், மழைக் காலம் ஆரம்பிக்கும் போது டெங்கு நுளம்பின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க சந்தர்ப்பம் உள்ளது.

எனவே பொது மக்கள் தமது சுற்றாடலை கட்டாயம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .