Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். றொசேரியன் லெம்பேட்
வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 73ஆவது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று காலை 9.45 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 73ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மேற்படி மன்னாரில் இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்துவ அமைப்பின் இணைப்பாளர் பிரசாந்த் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இளைஞர், பொது மக்கள், சிவில் அமைப்புக்கள், பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago