Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூலை 04 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் இன்றையதினம் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
கடந்த 29ஆம் திகதி கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர்பிரிவில் மனித எச்சங்கள் சில இனங்காணப்பட்டன.
இந் நிலையில் கடந்த 30.06.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேரடிராகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இந் நிலையில் குறித்த மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில், எதிர்வரும் 06.07.2023அன்று மேலதிக அகழ்வுகளை மேற்கொள்வதற்கு நீதிபதியால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலிலேயே குறித்த இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மேலும் குறித்த விஜயத்தின்போது சட்டத்தரணி இரட்ணவேலுடன் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago