Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயன் உணவுடன் கூடிய மது விற்பனை நிலையத்தினை இடம் மாற்றுவதில் மாவட்டத்தின் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் இம்மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. இம்மது விற்பனை நிலையம் திறப்பதற்கு முன்னரே ஒன்று கூடிய பொது மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
தனிநபர் ஒருவர் உணவு தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார். அவரை கரைச்சி பிரதேச செயலாளர் சந்தித்து குறுகிய காலத்திற்குள் மது விற்பனை நிலையத்தினை இடம் மாற்றுவதாக உறுதி மொழி வழங்கி இருந்தார்.
மது வரித் திணைக்களத்தினால் குறித்த மது விற்பனை நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியில் பிரதேச சபையின் கிராம வீதி ஒன்று வாகனத் தரிப்பிடமாக அனுமதியில் வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம்; ஆண்டு உணவகத்துக்கு மட்டும் பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்ட மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பிரதேச சபையின் அனுமதியில் தங்ககம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இம்மது விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடங்கள் அமைப்பதற்கான அனுமதிகளும் பிரதேச சபையினால் வழங்கப்படவில்லை. கரைச்சி பிரதேச செயலாளரின் எந்தவிதமான அனுமதிகளும் இம்மது விற்பனை நிலையத்திற்கு வழங்கப்படவில்லை. இதுவும் தகவல் அறியும் சட்டம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட, கரைச்சி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்விடயங்கள் ஆராயப்பட்ட போதிலும் இதுவரை குறித்த மது விற்பனை நிலையம் இடம் மாற்றப்படவில்லை.
மாவட்டத்தின் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்காததன் காரணமாகவே தற்போதும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் அக்கராயன் மது விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது. இதனை இடம் மாற்றுவதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
1 hours ago
1 hours ago