Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மல்லாவி பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்த மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் சிகிச்சை மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு, மல்லாவி பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்த மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் சிகிச்சை, மல்லாவி ஆதார வைத்தியசாலையில் டொக்டர் வை. சிவகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மல்லாவியில் இருந்து நீண்டதூரப் பயணம் மேற்கொண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு செல்லும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதனை வெற்றிகரமாக ஆரம்பித்துவைப்பதற்கு உறுதுணையாக இருந்த பிராந்திய வைத்திய அதிகாரி முல்லைத்தீவு, மற்றும் மல்லாவி பிராந்திய வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் ருசாந்தினி சீவாமிர்தத்துக்கும் இதனை ஆரம்பித்து வைத்த மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் நிபுணரான டொக்டர் சிவகரனுக்கும் மல்லாவி ஆதார வைத்தியசாலையின் ஏனைய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், வைத்தியசாலை சார்பாக நன்றிகளைத்
தெரிவித்துள்ளனர் R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
37 minute ago
47 minute ago