2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாரிய விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய  விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.

குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது. முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .