2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நெல்லை விற்பனை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லை சரியான விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

வடக்கில் அதிகளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக கிளிசொச்சி காணப்படுகின்றது.

உரம்,எரிபொருள் போன்ற பல்வேறு தட்டுப்பாட்டிற்கு மாத்தியில் விவசாயிகள் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் அறுவடையில் பாரிய வீழ்சியை கண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் ,மற்றும் கண்டாவளை நெற்களஞ்சியசாலைகள் நெல்லினை கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதும் நெல்கொள்வனவு சபை விவசாயிகளிடம் இருந்து நெல் கௌ்வனவை நிறுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

அரசாங்கத்தினால் நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நெல்லினை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்பின் சம்மேளன செயலாளர் முத்து சிவலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக அறுவடை நிறைவு பெற்றுவரும் காலத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையினரை தொடர்புகொண்டு கேட்டபோது கொள்வனவு செய்யப்பட்ட நெல்லிற்கான நிதி கிடைக்கவில்லை இதனால் கொள்வனவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு  பணங்கள் இன்னும் செலுத்தப்படவில்லை என்றும் பணம் கிடைக்காத நிலையில் நெல்கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தனியார் நெல்லுக்கான விலையினை வீழ்த்தி மிககுறைவான விலையில் நெல்லினை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

கிளிநொச்சி மாவட்டத்தில் 28 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளோம் சிறுபோக உற்பத்தியில் உரம்மற்றும் களைநாசினி போன்ற தட்டுப்பாட்டினால் உற்பத்தியில் வீழ்ச்சி கண்டுள்ளோம் 32 ஆயிரம் மெற்ரிக்தொன் நெல்லினையே அறுவடையாக பெற்றுள்ளோம் 

நெல்கொள்வனவு சபையானது விவசாயிகளிடம் இருந்து 300 மெற்ரிக்தொன் நெல்லினை கொள்வனவு செய்துவிட்டு பணம் இல்லாத நிலையில் நிறுத்திவிட்டார்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான பணம் இன்னும் கிடைக்கவில்லை இந்த சந்தர்பத்தினை பயன்படுத்தி 10ஆயிரம் மெற்ரிக்தொன் நெல்லினை தனியார் கொள்வனவு செய்திருக்கலாம் என எதிர்பாக்கின்றோம் .

ஏனைய விவசாயிகள் தங்களின் நெல்லினை காயவைத்து தங்களின் களஞ்சியங்களில் வைத்திருக்கின்றார்கள் நெல்லினை நாங்கள் அறாவிலைக்கு கொடுப்போமாக இருந்தால் இனிவரப்போகும் காலபோக நெற்செய்கையினை முழுமையாக கைவிடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

நாட்டில் மக்களின் அன்றாட உணவு தேவைக்கான விலைகளில் பாரிய ஏற்றம் கண்டுள்ள நிலையில் தற்போது கோதுமை மாவின் விலை 380 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது இதனால் வெதுப்பக உணவகங்களின் விலையிலும் பாரிய விலைஏற்றம் கணப்படுவதுடன் கோதுமாவுக்கான தட்டுப்படு சந்தையில் நிலவி வருகின்றது இந்தநிலையில் மக்கள் தற்போது அரிசி மாவினை பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள் வீடுகளில் இடியப்பம்,பிட்டு,என கோதுமை மா பாவனையினை குறைத்து அரிசி மாவிலான உணவுகளையே மக்கள் நாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் எதிர்காலத்தில் அரிசிக்கான கேள்வி அதிகரிக்கவுள்ளதாக விவசாயிகள் எதிர்பாக்கின்றார்கள்.

இந்நிலையில் அரசாங்கம் சரியான விலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்து அதனை மக்களுக்கு சரியான சிலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .