Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 25 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கருகில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பாரவூர்தி மற்றும் துவிச் சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
நெல்லை வீதியில் உலர விடப்படும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது.
இவ்விபத்தில் வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் மேலதிகவிசாரனைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்து சில வாரங்களுக்கு முன்னர் பரத்தன் பூநகரி வீதியிலும் நெல் உலரவிட்டதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியிருந்தாார்.
அத்தோடு மேலும் சிலர் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago