2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்

Freelancer   / 2022 நவம்பர் 02 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்குள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட திருட்டு குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த தப்பிஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு 06 ஆம் வட்டாரம் சிவநகர் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேகத்தின் அடிப்படியில் சிவநகர் பகுதியை  சேர்ந்த 28 வயதான குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .