Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஜூன் 03 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் இவர்கள் ஊர்மனைக்கு வந்துள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள், கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.
குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையிலே குறித்த 5 பேரும் படகு மூலம் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில் திங்கட்கிழமை(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு,விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago