Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சம்பளம் பெறுகின்ற ஆசிரியர்கள், தாம் கல்வி கற்பிக்கின்ற முன்பள்ளிகளின் பெயர்களை “வீரமுத்துக்கள் முன்பள்ளி” என பெயரினை மாற்றி அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரு போதும் அதனை அனுமதிக்க முடியாது என கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சியின் உறுபினர் செல்வராணி தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் உள்ள மயூரன் முன்பள்ளியின் பெயரினை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் வீரமுத்துக்கள் முன்பள்ளி என மாற்றியிருகின்றார்கள் இதற்கு நாம் பிரதேச மக்களுடன் இணைந்து கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டோம்.
எங்கள் கிராமங்களில் உள்ள முன்பள்ளிகள் மக்களிள் சொத்து. அவற்றுக்கு பொறுப்புச் சொல்லவேண்டியது மக்களே. இந்த நிலையில மக்களின் கருத்துக்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாது ஆசிரியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவதற்காக அவர்கள் விரும்பியதனை செய்துவிட அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும், இச் செயற்பாட்டினை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், இன்று கண்ணகிநகர் மற்றும் பிரமந்னாறு பகுதிகளில் உள்ள இரண்டு முன்பள்ளிகளில் அமைக்கப்பட்ட பெயர் பலகையினை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago