2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

‘சிங்களவர் எவரையும் குடியேற்ற மாட்டேன்’

Editorial   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

.ஷேன் செனவிரத்ன

முல்லைத்தீவு- குருந்தூர் மலைப் பகுதியில்  இடம்பெற்றுவரும் தொடர் நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாகத் தெரிவித்துள்ள புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர்விதுர விக்ரமாநாயக்க,  ஒரு நாட்டில் உள்ள தொன்மைகள் அந்த நாட்டிற்கு மாத்திரம் சொந்தமானவை அல்ல உலகம் முழுவதும் சொந்தமானவை என்றும் தெரிவித்தார்.

கண்டி- ஹிந்தகல ரஜமஹா விஹாரையில் உள்ள புராதன ஓவியங்களை பாதுகாக்கும் பணிகளை பார்வையிடுவதற்காக நேற்று (27) வந்திருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணி மாத்திரமே தொல்பொருள் பிரதேசமாகப் பெயரிடப்படுமே தவிர  அங்கு சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

தற்காலத்தைப் போன்று தொன்மைப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான  வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

விஹாரை தேவாலயம் சட்டத்திருத்தம் தற்போது வரையப்பட்டு வருவதுடன், மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .