Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 09 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மூன்று மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, அம்பலப்பெருமாள்குளம் பொது நோக்கு மண்டபத்தில் அம்பலப்பெருமாள்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வேதநாயகம் குணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகள் குறைந்த பின்தங்கிய ஒரு பாடசாலை ஆகும்.
பாட்சாலையில் 2016ஆம் ஆண்டில் உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.
மாணவன் சிறிஸ்கந்தராசா சிறிமேனகன் 3B பெறுபேற்றையும் குணசிங்கம் சுயாந் 3B பெறுபேற்றையும் ஜெகதாஸ் யசிந்தன் 2 B C பெறுபேற்றையும் பெற்றுள்ளனர். நிகழ்வில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக தலா 30,000 ரூபாய் நிதி அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிதியை புலம்பெயர் உறவுகள் வழங்கியிருந்தனர்.
நிகழ்வில், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துணுக்காய் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
36 minute ago