2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கோர விபத்தில் மூதாட்டி மரணம் - 14 பேர் படுகாயம்

Freelancer   / 2024 ஜூன் 22 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் நேற்று (21)மாலை  ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்  அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி  பிரதேசத்திற்கு வந்தவர்களின் வாகனமே  விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில்  காயமடைந்த அனைவரும்  முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு       மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் என தெரிய வருகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X