2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குருந்தூர் மலையில் வயல் நிலங்கள் சுவீகரிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை, குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதன் நேற்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்களை தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து காணிகளை பார்வையிட்டார்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்டு புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவிகரித்துள்ளதாகவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களை வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்றும் அமைச்சருக்கு தெளிவு படுத்தினார்.

இது தொட‌ர்பாக உடனடியாக தான்  விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .