Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 மே 25 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வடமாகாணசபையின் , முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டசெயலாளருமான துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர் இ.மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி சரவணராஜா முன்னிலையில் வியாழக்கிழமை (25) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கினை ஆராய்ந்த நீதவான் குறித்த வழக்கினை எதிர்வரும் 2023.10.19 திகதிக்கு தவணையிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணையின்போது ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோருக்கு ஆதரவாக நீதிமன்றிற்கு வருகைதந்த அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025