Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஜூன் 21 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில புதன்கிழமை (21) விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
கம்மன்பிலவின் வருகைக்கு முன்னதாக குருந்தூர்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய தண்ணிமுறிப்புக்குரிய மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தண்ணிமுறிப்புப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் இதன்போது கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் அ.பீற்ரர் இளஞ்செழியன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
உதயன் கம்மன்பில எம்.பி குருந்தூர்மலைக்கு விஜம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கருந்தூர்மலை அடிவாரம் மற்றும் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
2 hours ago
3 hours ago