2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கடலுக்குள் ஒளிபாச்சி மீன்பிடித்தவர்கள் அதிரடி கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் 3 படகுகளும்,மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகள் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் சான்றுப் பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்தொழில் நடவடிக்கையில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .