Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூன் 08 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி கோரியுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வயோதிபர் சிங்கள மொழி பேசுபவர் என்பதுடன் தன்னை குணபால மென்டிஸ் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
எனினும் இவர் தொடர்பில் எவ்வித மேலதிக தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வவுனியா போது வைத்தியசாலையின் உளநல சிகிச்சைகள் பிரிவின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த வயோதிபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவுடனோ அல்லது வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி சி. சுதாகரன் தொடலைபேசி இலக்கம் 071 4323585, உளநல பிரிவு 024 2227784, 12 ஆவது விடுதி இலக்கம் 024 2222762, 024 2222262 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago