
தற்காலத்தில் கிரெடிட் கார்ட்களின் பாவனை இலங்கையில் அதிகரித்த வண்ணமுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. இலங்கையில் கிரெடிட் கார்ட்கள் நீண்ட காலமாக பாவனையிலுள்ள போதிலும், வெவ்வேறு சமூக பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அவற்றை வழங்கும் வங்கிகளின் மூலமாக முன்னெடுக்கப்படும் வெவ்வேறு விதமான விளம்பர பிரசார செயற்பாடுகளின் காரணமாக அவற்றின் பாவனை தற்போது அதிகரித்து காணப்படுகின்றன எவ்வாறாயினும், இந்த அதிகளவு போட்டிகரத்தன்மை காரணமாக தமக்கென கிரெடிட் கார்ட் ஒன்றை பெற்றுக் கொள்ள முனையும் பலர், பல இடர்களுக்கு முகங்கொடுக்கவும் நேரிடுகிறது.
இலங்கையின் கிரெடிட் கார்ட் சந்தையில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்தி பிரபல்யமடைந்த சம்பத் கிரெடிட் கார்ட் பற்றி, சம்பத் வங்கியின் விற்பனை மற்றும் விநியோக பதில் பொது முகாமையாளர் தாரக ரன்வல கருத்து தெரிவிக்கையில்,
சம்பத் கிரெடிட் கார்ட் என்பது, இன்றைய காலகட்டத்தில் பலர் மத்தியில் பிரபல்யமடைந்து காணப்படுகின்றது. அண்மைக்காலத்தில் சம்பத் கிரெடிட் கார்ட்கள் மக்கள் மத்தியில் இவ்வாறு பிரபல்யமடையக் காரணம் என்ன?
வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வசதி மற்றும் அனுகூலங்கள் குறித்து சம்பத் கிரெடிட் கார்ட்கள் கவனம் செலுத்துகின்றமை இதற்கு பிரதான காரணமாகும். கிரெடிட் கார்ட் என்பது கடன் சுமை என பலர் நினைத்த காலப்பகுதியில், அந்த கருத்தை மாற்றியமைத்திருந்தது சம்பத் கிரெடிட் கார்ட் வகைகளாகும்.
நாம் சம்பத் கிரெடிட் கார்ட்களை அறிமுகம் செய்தது 'The Reasonable Choice' அல்லது 'பொறுப்புடன் கூடிய தெரிவு' எனும் வகையிலாகும். நாம் அத்துடன் நின்றுவிடாமல், சம்பத் கிரெடிட் கார்ட் ஒன்றை பொறுப்புடன் தெரிவு செய்யவேண்டியது ஏன் என்பதை நாம் செயல் ரீதியாக நிரூபித்துக் காண்பித்தோம்.
ஏனைய கிரெடிட் கார்ட் வகைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து மறைமுகமாக 28 வெவ்வேறு வகையான கட்டணங்களை அறவிடும் நிலையில், நாம் மிகவும் ஒழுக்கமான முறையில் 4 அல்லது 3 கட்டணங்களை மட்டுமே அறவிட நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இது நாம் எமது இலாபத்தை விட, கொடுக்கல் வாங்கலை மேற்கொள்பவருக்கு கிடைக்கும் அனுகூலங்களை கவனத்தில் கொண்டு முன்னெடுத்த செயற்பாடாகும். இதனடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களை பிரதான அபிலாஷையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது சம்பத் கார்ட்ஸ் பிரபல்யமடைவதற்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தது.
சம்பத் கிரெடிட் கார்ட் இந்த வகையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு பெற்றுக் கொடுக்கும் ஏனைய அனுகூலங்கள் என்ன?
நாம் சந்தையில் காணப்படும் ஏனைய கிரெடிட் கார்ட்களுடன் வேறுபடுவதற்கு, நாம் பெற்றுக் கொடுக்கும் வெவ்வேறு அனுகூலங்கள் மற்றும் சேவைகள் காரணமாக அமைந்துள்ளன.
சம்பத் கிரெடிட் கார்ட் ஒன்றின் மூலமாக எரிபொருள் நிரப்பும் போது, நாம் எவ்விதமான மேலதிக கட்டணத்தையும் அறவிடுவதில்லை. எமது வாடிக்கையாளர்களுக்கு இது எந்தளவு வசதியானது என்பது பற்றி நாம் அறிவோம். இந்த அனுகூலம் வருடம் முழுவதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி வழங்கி ஒரே கிரெடிட் கார்ட் சம்பத் கிரெட் கார்ட் ஆகும்.
அதுபோலவே, வெளிநாட்டு சுற்றுலாவில் ஈடுபடும் சகல சம்பத் கிரெடிட் கார்ட் உரிமையாளருக்கும் நாம் இலவசமாக வெளிநாட்டு போக்குவரத்து காப்புறுதியையும் வழங்குகிறோம். தற்போது சந்தையில் காணப்படும் கிரெடிட் கார்ட்களில் விமான சீட்டொன்றை கொள்வனவு செய்வதற்கு சம்பத் கிரெடிட் கார்ட் ஒன்றை பாவிக்காத போதிலும் இந்த அனுகூலத்தை எவ்விதம் மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் வழங்குவது சம்பத் கிரெடிட் கார்ட் மட்டுமேயாகும்.
சந்தையில் காணப்படும் சகல கிரெடிட் கார்ட்டும் வாடிக்கையாளர்களுக்காக வெவ்வேறு பிரசார நிகழ்ச்சிகளை முன்னெடுக்கின்றன. சம்பத் கார்ட்ஸ் பிரசார திட்டம் இவற்றிலிருந்து வேறுபடுவது எவ்வாறு?
Real Deals எனும் தொனிப்பொருளில் வருடம் முழுவதும் நாம் பிரசாரத் திட்டங்களை முன்னெடுக்கிறோம். இந்த சகல நிகழ்ச்சிகளிலும் முழு ஒழுக்கநெறியுடன் கூடிய மறைமுக கட்டணங்கள் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு உயர் அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் செயலாற்றுவது எமது விசேடத்துவமாகும். உதாரணமாக, அண்மையில் காலியின் இடம்பெற்ற Town on Sale வருடாந்த நிகழ்ச்சியை கருத முடியும். இதன் போது எம்முடன் இணைந்து கொண்ட வியாபார தாபனங்கள் பலவற்றிலிருந்து கொள்வனவு செய்திருந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 25 வீத கழிவை சம்பத் கார்ட்ஸ் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
கார்கில்ஸ் பூட் சிட்டி உடன் இணைந்து முன்னெடுத்திருந்த Super Market பிரசார செயற்றிட்டம், ஆடை அணிகளுக்காக U Shop V Drop, சொகுசு ஹோட்டல்களில் ஓய்வு பொழுதை களிக்கும் வகையில் Card Holder stays for free, முன்னணி உணவகங்களில் தள்ளுபடிகளை வழங்கும் Feast Free, வட்டியில்லாத மாதாந்த தவணைக்கட்டண வசதியை வழங்கும் Absolute 0% interest installments plans போன்ற வெவ்வேறு நிகழ்ச்சிகளின் மூலமாக நாம் வருடம் முழுவதும் எமது கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு அனுகூலங்களை வழங்கி வருகிறோம்.
சம்பத் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் ஏனைய அனுகூலங்கள் என்ன?
சம்பத் கார்ட் உரிமையாளர்களுக்கு தமது மாதாந்த கட்டணங்களை செலுத்துவதற்காக தமக்கு விரும்பிய தினத்தை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும். பொறுப்புடன் செயலாற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு இந்த வசதி மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதை புதிதாக குறிப்பிட வேண்டியதில்லை. அதுபோலவே, தமது பிள்ளைகள் அல்லது குடும்ப அங்கத்தவர் ஒருவருக்காக Supplementary கார்ட் ஒன்றை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பாராயின், தமது கடன் பெறுமதி எல்லையினுள், குறித்த கார்ட்டுக்கான கடன் பெறுமதியை உள்ளடக்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
சம்பத் வங்கி தமது சேவைகளை காலத்துக்கு காலம் புதுப்பிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு வசதியை சேர்க்கும் வங்கியாக திகழ்கிறது. இந்த விடயம் சம்பத் கார்ட் வகைகளுக்கும் பொருந்துமா?
ஆம். இது வரையில் நாம் சம்பத் கார்ட் உரிமையாளர்களுக்காக பாரம்பரிய நிலுவை அறிக்கைக்கு பதிலாக மின்னஞ்சல் ஊடாக அதனை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது சம்பத் கார்ட் உரிமையாளர்களுக்கு எவ்வேளையிலும், எங்கிருந்தும் தமது மின்னஞ்சல் முகவரியினூடாக மாதாந்த நிலுவை தொடர்பான அறிக்கையை பார்வையிட முடியும். அதுபோலவே, தபால் மூலமாக அனுப்பப்படும் அறிக்கை, காணாமல் போதல், காலம் தாழ்த்திய கிடைப்பனவு போன்ற அசௌகர்யங்களுக்கு இந்த புதிய முறை சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.
இதற்கு மேலாக கிரெடிட் கார்ட் மூலமாக இடம்பெறும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் SMS ஊடாக உடனடியாக குறுந்தகவல் அனுப்பப்படும் (SMS Alert), இது விசேடமாக தமது கிரெடிட் கார்ட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கிரெடிட் கார்ட் ஒன்றை வாங்குவதற்கு எதிர்பார்க்கும் நபருக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?
எப்போதும் தமது தேவைக்கு மிகவும் பொருத்தமான, அதுபோலவே, தமக்கு அதிகம் அனுகூலம் வழங்கும் கிரெடிட் கார்ட் ஒன்றை தெரிவு செய்வது சிறந்தது. கார்ட் ஒன்றை தெரிவு செய்யும் முன்னர் அனுகூலங்களை ஒப்பிட்டுப்பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உயர் அனுகூலங்களை வழங்கும் கிரெடிட் கார்ட் வகைகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு அதிகளவு வசதியை சேர்க்க முடியும். நீங்களும் பொறுப்பு வாய்ந்த வகையில் பிரத்தியேக நிதி செயற்பாடுகளை நிர்வகிப்பவராக இருந்தால் பொருத்தமான கிரெடிட் கார்ட் ஒன்றின் மூலம் உங்கள் வெற்றிகரமான செயற்பாட்டின் பங்காளராக திகழ முடியும்.