2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம்

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

04.02.2019  

தேசிய தின விடுமுறையை முன்னிட்டு, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் - வாங்கல்கள் இடம்பெறவில்லை.  

05.02.2019  

டிஸ்டிலரீஸ், டயலொக் அக்ஸியாடா, லங்கா ஒரிக்ஸ் பினான்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசுட்டி, மறை பெறுமதியையும் S&P SL20 சுட்டி, நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 401 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த, நிறுவனசார் முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

06.02.2019  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஸ்ரீ லங்கா டெலிகொம், கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 249 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. மேலும், வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

07.02.2019  

டிஸ்டிலரீஸ், செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும் S&P SL 20 மறை பெறுமதிகளையும் பதிவு செய்திருந்தது. புரள்வு ரூ. 797 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஈடுபாடு, பங்கு விற்பனையில் அதிகளவு காணப்பட்டது.  

08.02.2019  

ஸ்ரீ லங்கா டெலிகொம், டீஜே லங்கா, எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 474 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. செலிங்கோ இன்சூரன்ஸ், யூனியன் வங்கி, சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு டீஜே லங்கா, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு, குறைந்தளவில் பதிவாகியிருந்தது.  

வாரத்தில் அபவிசு 0.30% சரிவையும் S&P SL20 0.47% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு ரூ. 481 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X