Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
30.09.2019
சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 770 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொலம்போ சிட்டி ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் பிளான்டேஷன் மனேஜ்மன்ட்ஸ் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு எயிட்கன் ஸ்பென்ஸ் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சிங்கபுத்ர ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் பெருமளவு ஈடுபட்டனர்.
01.10.2019
சிலோன் டொபாக்கோ கம்பனி, கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு மறைப்பெறுமதியையும், நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 214 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு செலிங்கோ இன்சூரன்ஸ் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது, கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது, சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டீஜே லங்கா மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது, வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
02.10.2019
சிலோன் டொபாக்கோ கம்பனி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 500 மில்லியனாக பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவில் ஈடுபட்டனர்.
03.10.2019
சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் புக்கிட் தாரா பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 696 மில்லியனாக பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி, செலிங்கோ இன்சூரன்ஸ் மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி ஆகிய பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் சம்பத் வங்கி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.
04.10.2019
ஸ்ரீ லங்கா டெலிகொம், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் LOLC ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 558 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
வாரத்தில் அபவிசு 1.42% சரிவையும் S&P SL20 0.31% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 548 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago