2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 24.06.2019 - 28.06.2019

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


24.06.2019  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், காகில்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அ.ப.வி.சு மறைப்பெறுமதியையும் S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 261 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, செமனெக்ஸ், காகில்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.  

25.06.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஹரிஸ்சந்திரா மில்ஸ், சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு எயிட்கன் ஸ்பென்ஸ், சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு வலிபல் பவர் எரத்னா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டளவில் பதிவாகியிருந்தது.  

26.06.2019  

டில்மா சிலோன் டீ கம்பனி, யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும், S&P SL20 சுட்டி மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி மற்றும் ரேணுகா கெப்பிட்டல் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஹற்றன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது.   

27.06.2019  

லயன் பிரெவரி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 337 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

28.06.2019  

டிஸ்டிலரீஸ், மெல்ஸ்டாகோர்ப் மற்றும் லயன் பிரெவரி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 300 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு கொமர்ஷல் வங்கி, சி ரி ஹோல்டிங்ஸ் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.  

வாரத்தில் அப.வி.சு 0.16% உயர்வையும் S&P SL20 0.30% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 519 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X