Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2017 ஜூலை 15 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மின்சாரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறான மின் உற்பத்தி நிலையத்தைக் கொண்டு நடத்துதல் என்பன, அவை தொடர்பான சட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்க முன்னெடுக்கப்படல் வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமே கையளிக்கப்பட்டுள்ளது' என்று, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில், அவர் வழங்கிய செவ்வியில் மேலும் கூறியதாவது,
கேள்வி: மின் பாவனையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது?
பதில்:மின் பாவனையாளர்களின் உரிமைகள் தொடர்பான கொள்கைகள், மின்சாரச் சேவை தொடர்பான வேலைத்திட்டங்களின் போது, இ.மி.ச பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் (ஆலோசனைகளை வழங்கள், மின் பாவனையாளர்களின் பிரச்சழனைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கக்கூடிய வேலைத்திட்டங்கள்) ஊடாக, பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முற்படல். மின் உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்கான ஒழுங்குவிதிகளை, எமது ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.
கேள்வி: மின் கட்டணக் கட்டுப்பாட்டின் போது, நுகர்வோருக்கு சலுகை வழங்குவது எவ்வாறு?
பதில்: நிர்ணயிக்கப்பட்ட முறைமையின் அடிப்படையிலேயே, கட்டணங்கள் தற்போது தீர்மானிக்கப்படுகின்றன. அதன் பிரகாரம், எல்லாச் செலவுகளும் சாதரமாகவன்றிக் காணப்படுவதாயின், அது அனுமதிக்கப்படுவதில்லை. சரியான செலவு மாத்திரமே அனுமதிக்கப்படும். அதேபோன்று, கட்டணத்தைத் தீர்மானிக்கும் போது, பொதுமக்களும் தங்களது யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்க முடியும். சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் பாவனையாளர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகை வேலைத்திட்டங்களும் செயற்படுத்தப்படும். நீண்டகால விலையேற்றத்தைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படும். அதேபோன்று, மின் உற்பத்திக்கான செலவைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மிகக் குறைந்த செலவிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கேள்வி: மின்சாரச் சேவையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆணைக்குழுவின் பங்கீடு என்ன?
பதில்: இயற்கையாகவே, மின்சாரமென்பது அபாயகரமானது. அதனால், உற்பத்தி முதல் கடத்தப்படலின் ஊடாக வீட்டுக்கு மின்சாரம் கொண்டுவரப்படல் வரையில், பாதுகாப்பு அத்தியாவசியமாகிறது. அதேபோன்று, வீட்டு உபயோகத்தின் போதும், பாதுகாப்பு அத்தியாவசியமாகிறது. இதற்காக, ஆணைக்குழுவினால் பல்வேறு ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர், மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகி, வருடத்தில் சுமார் 200 பேர் வரையில் உயிரிழந்தனர். இந்நிலைமை, 2012ஆம் ஆண்டுக்கு முன்னரானது. தற்போது அந்த நிலைமை, 100ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த மரணங்களுக்கு பல்வேறு காரணங்கள் ஏதுவாகியுள்ளன. அவற்றை நீக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. புதிய ஒழுங்குவிதிகளை விதித்தல், மின்சார வயரிங் பொருத்துனர்களுக்கான பயிற்சிகள் மற்றும் அவர்களுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்களை வழங்குதல். அதேபோன்று, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின்சார விநியோகச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்தல்.
கேள்வி: மின் பாவனையாளர்களுக்கு, தரமான சேவை கிடைக்கிறதா?
பதில்: ஆம். தரம் தொடர்பில், இரு வி;டயங்கள் அவதானிக்கப்படுகின்றன. ஒன்று, விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் தரம். அதாவது, உரிய வோல்ட்டளவில் உரிய அதிர்வளவில் மின்சாரம் கிடைக்கப்பெறுகிறதா என்பதாகும். மின் விநியோகத்தில் காணப்படும் தடங்கல் காரணமாக, பாவனையாளர்களின் மின் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படாது என்பனை உறுதிப்படுத்துவதாகும். இது தொடர்பில், பல்வேறு ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டு, அவை செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. நட்டஈடு வழங்குவதைப் போன்று, மின்சாரச் சேவையை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அமைய, வருமானக் கட்டுப்படுத்தல் போன்றன செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டாவது, மின்சாரச் சேவையை வழங்கும் நிறுவனங்களின் தரமான சேவையாகும். அதில், பாவனையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முற்படுதலும் அடங்குகிறது. இல்லாவிடின், தொடர்பாடலைப் பெற்றுக்கொடுக்கும் காலம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி: மின்சாரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறாக மின் உற்பத்தி நிலையங்களைக் கொண்டு நடத்துதல் தொடர்பில், ஆணைக்குழுவின் தலையீடு என்ன?
பதில்: ஆம், மின்சாரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறான மின் உற்பத்தி நிலையத்தைக் கொண்டு நடத்துதல் என்பன, அவை தொடர்பான சட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்க முன்னெடுக்கப்படல் வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு, எம்மிடமே கையளிக்கப்பட்டுள்ளது. விசேடமாக, அனல் மின் உற்பத்தி நிலையங்களினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அத்தியாவசியமாகிறது. அதேபோன்று, பாதுகாப்புக்காக, பொதுமக்களின் பங்கீட்டை அதிகரித்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொதுமக்களின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. நேரத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டண முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025