Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சென்ற வாரத் தொடர்ச்சி)
விலை உழைப்பு விகிதத்துக்கமைய பங்கின் பெறுமதியை நிர்ணயிக்கும் முறைகள்:
விலை உழைப்பு விகிதத்துக்கமைய பங்கின் பெறுமதியை நிர்ணயித்தல் கீழே குறிப்பிட்டவாறு மூன்று முறைகளில் மேற்கொள்ள முடியும்.
கம்பனியின் விலை உழைப்பு விகிதத்தை கணக்கிட முடியும்.
இதற்கு முன்னர் குறிப்பிட்டவாறு, கம்பனியின் விலை உழைப்பு விகிதமானது, நடைமுறை அல்லது முன்னோக்கிய விலை உழைப்பு விகிதமாகக் கணக்கிட முடியும்.
பிரமாணமான விலை உழைப்பு விகிதத்தை (Benchmark PE) கணக்கிட முடியும்.
பிரமாணமான விலை உழைப்பு விகிதம் எனப்படுவது, கம்பனியின் விலை உழைப்பு விகிதத்துடன் ஒப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் விகிதமாகும். பிரமாணமான விலை உழைப்பு விகிதத்தைக் கணக்கிடக்கூடிய பல முறைககள் காணப்படுமிடத்து அவற்றுள் மிகவும் பயனுள்ள சில முறைகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
கம்பனியின் கடந்தகால சராசரி விலை உழைப்பு விகிதம்:
கம்பனியின் கடந்த சில வருடங்களின் விலை உழைப்பு விகிதத்தினது கூட்டுத்தொகையைக் குறிப்பிட்ட வருட எண்ணிக்கைகளால் வகுக்கும்போது, அதன் கடந்தகால விலை உழைப்பு விகிதங்களின் சராசரி கணக்கிடப்படுகின்றது.
கம்பனிக்கு மிகவும் நெருக்கமானதும் பொருத்தமானதுமான கம்பனியொன்றின் நடைமுறை, முன்னோக்கிய விலை உழைப்பு விகிதம்.
கம்பனிக்கு உரித்தான வியாபாரத்துறையில் கம்பனிக்கு மிகவும் பொருத்தமான கம்பனிகளின் கூட்டமொன்றின் நடைமுறை, முன்னோக்கிய விலை உழைப்பு விகிதம்.
கம்பனிக்கு உரித்தான வியாபாரத்துறையின் நடைமுறை, முன்னோக்கிய விலை உழைப்பு விகிதம்.
மொத்தச் சந்தையின் நடைமுறை, முன்னோக்கிய விலை உழைப்பு விகிதம்.
கம்பனியின் விலை உழைப்பு விகிதத்தை பிரமாணமான விலை உழைப்பு விகிதத்துடன் ஒப்பிடமுடியும். இந்த ஒப்பிடலின் மூலம் கீழ்க்காணும் தீர்மானத்திற்கு வரமுடியும்.
நியாயமாக மதிப்பீடு செய்யப்பட்ட பங்குகள் (Fairly valued stocks)
கம்பனியின் விலை உழைப்பு விகிதமானது பிரமாணமான விலை உழைப்பு விகிதத்துடன் சமமாகப் காணப்படின் அக்கம்பனியின் பங்குகள் நியாயமான மதிப்பீடு செய்யப்பட்ட பங்குகள் எனக் கருதப்படும்.
குறை மதிப்பீடு செய்யப்பட்ட பங்குகள் (Undervalued Stocks)
கம்பனியின் விலை உழைப்பு விகிதமானது, பிரதானமாக விலை உழைப்பு விகிதத்திலும் பார்க்கக் குறைவாகக் காணப்படின், அக்கம்பனியின் பங்குகள் குறை மதிப்பீடு செய்யப்பட்ட பங்குகள் எனக் கருதப்படும். எனவே, இத்தகைய பங்குகளின் பெறுமதி அதன் சந்தை விலையிலும் பார்க்க அதிகமானதாகும்.
மிகை மதிப்பீடு செய்யப்பட்ட பங்குகள் (Overvalued Stocks)
கம்பனியின் விலை உழைப்பு விகிதமானது, பிரமாணமான விலை உழைப்பு விகிதத்திலும் பார்க்கக் கூடுதலாகக் காணப்படின், அக்கம்பனியின் பங்குகள் மிகை மதிப்பீடு செய்யப்பட்ட பங்குகள் எனக் கருதப்படும். எனவே, இத்தகைய பங்குகளின் பெறுமதி, அதன் சந்தை விலையிலும் பார்க்கக் குறைவானதாகும்.
கம்பனியின் பங்கொன்றின் பெறுமதியைக் கணக்கிடல்
மேற்குறிப்பிட்ட செய்கையில் பங்கொன்று நியாயமாக குறை மதிப்பீடு, மிகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனத் தீர்மானிப்பதற்கும் மேலாக, பங்கொன்றின் பெறுமதியை மதிப்பீடு செய்வதும் பயனுள்ளதாகும்.
பங்கொன்றின் பெறுமதி எனப்படுவது ஒரு பங்குக்கான உழைப்பைப் பிரமாணமான விலை உழைப்பு விகிதத்தால் பெருக்கும்போது கிடைக்கும் பெறுமதியாகும்.
(இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago
24 Nov 2024