2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

தனியாள் நிதித் திட்டமிடல்

Editorial   / 2019 பெப்ரவரி 20 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுடைய நிகழ்கால, எதிர்கால நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கிகாரம்   

மு.திலீபன்   
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை - யாழ்ப்பாணம்  

(சென்ற வாரத் தொடர்ச்சி)

வாழ்க்கை நிகழ்வுகளும் நீங்களும்

திருமணம் செய்தல்

திருமணத்துக்கான திட்டமிடல்கள்,  வாழ்க்கைத் துணையுடன் இணைந்த புதிய வாழ்க்கையின் ஆரம்பகாலமானது, ஒரு பசுமை நிறைந்த காலமாக அமைகின்றது.

வெற்றிகரமான இப்புதிய வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்க்கைத் துணையுடன் இணைந்து உருவாக்கிக் கொள்ளும் நிதி (வாழ்க்கை) மேலாண்மையானது, முக்கியத்துவம் பெறுவதுடன், எதிர்பாராமல் வாழ்க்கையில் ஏற்படவல்ல நிதிச்சிக்கல்களை, உறவுகளுக்கு அப்பால் கொண்டு சென்று, தீர்வுகண்டு கொள்ள முடியும்.   

நிதி முன்னுரிமைகள்   

உறவுகளின் விரிசல்களுக்கான முக்கிய பங்காளியாக, நிதிப்பிரச்சினை அமைவதுண்டு. மிக முக்கியமாக, ஒவ்வொருவரும் தங்களுக்கிடையிலான கடந்தகால நிதித் தகவல்கள், குறிக்கோள்கள் தொடர்பான தெளிவான புரிந்துணர்வுடன் இணைந்து கலந்தாலோசித்து, நிதித்திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.

வேறுபாடுகளை விவாதித்து விசேடமான உறுதிப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு எந்தவொரு பொதுவான அணுகுமுறையையும் குறிப்பிட முடியாது.

சூழ்நிலைக்கு இசைவான, பொதுவான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்துக்கு அமையச் செயற்படுத்த வேண்டும்.   

இல்லறத் திட்டமிடல் அடிப்படைகள்   

கடந்த காலங்களில் பணம், சேமிப்பு,   கடன் தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள அனுபவங்களின் பகிர்வு, நிதித் திட்டமிடல்,  நிதி மூலங்கள் தொடர்பான உங்கள் வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகள் தொடர்பிலான ஆரோக்கியமான கலந்துரையாடல்கள்.   

நிதி மேலாண்மைப் புரிந்துணர்வுப் பண்புகளின் அடிப்படையில் இணைந்த பாதீட்டைத் தயாரித்தல், குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான கலந்துரையாடல்கள்.   

விரும்பத்தகாத நிகழ்வுகளிலிருந்து உங்கள் துணையை வலுவாகப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், உங்களுக்கு உடைமையான நிதி ஆவணங்கள், காப்புறுதி உடன்படிக்கைகள் தேவைக்கு ஏற்ப மீளாய்வு, முறைமைப்படுத்தப்படுதல்.   

திருமணச் செலவு குறிப்பிடத்தக்க அளவாக அமைவதனால், வாழ்க்கைத் துணையுடன் கலந்தாலோசித்து திருமணமுறை, செலவுப்பங்கீடுகளைத் தீர்மானித்துக் கொள்வதுடன், பாதீட்டில் குறிப்பிடத்தக்கதொரு பங்கை,? திருமணத்தின் முக்கிய பாகத்துக்கு வழங்குதல்.   

படிமுறை நான்கு:  

இசைவாக்க இடர்நேர்வு மட்டத்தை அறிந்திருத்தல்   

உங்களுடைய இசைவாக்க இடர்நேர்வு மட்டத்தை மதிப்பீடு செய்தல், நிதித்திட்டமிடலின் மிக முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.

இடர்நேர்வு வெற்றிகரமான முதலீட்டுக்கான ஓர் அச்சுறுத்தல் எனப் பொருள் கொள்ள முடியும். இது முதலீடுகளில் இருந்து எதிர்பார்க்கும் வருமானங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. 

வழமையான உயர்ந்த நட்ட அச்சம் (இடர்நேர்வு) கொண்ட முதலீடுகள்,  அதிக வருமானத்​தை  எதிர்பார்த்து நிற்கின்றன. அதிக இடர்நேர்​வை எதிர் கொள்வதன் ஊடாக, முதலீட்டாளர்கள் அதிக வருமானத்தை உழைத்துக் கொள்ள முடிகின்றது.   

நீங்கள் அதிக வருமானத்தைச் சாதகப்படுத்திக் கொள்ள சாத்தியமான சில இழப்புகளை ஆவலுடன் எதிர் கொள்ளத் தயாரா?   

பின்வரும் ஐந்து வகைகளாக இசைவாக்க இடர்நேர்வை வகைப்படுத்த முடியும். எது உங்களுக்குச் சிறப்பானது?   

1. பழைமை வாய்ந்த (Conservative) முதலீடுகளுடன் தொடர்புடைய இடர்நேர்வுகளை எதிர் கொள்வோர்:

முதலீட்டில் நட்டத்தைச் சந்திப்பதற்கு விரும்பாத மனப்பாங்கைப் பிரதிபலிப்பதால், சாத்தியமான ஆதாயங்களில் இருந்தும் விலகி இருக்க நேரிடுகின்றது.   

2. மிதமான ஜாக்கிரதை (Moderately cautious):

நீண்டகாலத்தில் முதலீடுகளில் இருந்தான வருமானம் அதிகரிக்கும் நோக்கில், குறித்த வரையறைக்கு உட்பட்ட இடர்நேர்வுகளை ஆவலுடன் நோக்கும் மனப்பாங்கினைப் பிரதிபலிக்கும். இது குறுங்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான பாரிய தளம்பல்களைத் தவிர்க்கின்றது.   

3. சமநிலை (Balanced):

இடர்நேர்வு,  வருமானங்களை நிறையிடுவதுடன், நீண்டகால நிதி குறிக்கோள்களை அடைவதற்கான சாத்தியமான அளவீடுகளை இனங்கண்டு கொண்டு, மதிப்பிடப்பட்ட இடர்நேர்வுகளின் அடிப்படையில் சமநிலையில் செயற்படுகின்றது.   

4. மிதமான தீவிரம் (Moderately aggressive):

அதிக முதலீட்டு இடர்நேர்வுகளை எதிர் கொள்ளத் தம்மைத் தயார்படுத்தி, சந்தையின் சராசரி வருமானத் திரும்பல்களைக் காட்டிலும் அதிகமான முதலீட்டு வருமானத்​தைத் தமது முதலீட்டு தேக்கத்திலிருந்து எதிர்பார்க்கின்றது. சந்தையில் எற்படும் இழப்பை, எதிர்நோக்கும் இடர்நேர்வுகளை விட அதிகமாக எதையும் ஏற்காத மனப்பாங்கைப் பிரதிபலிக்கும்.   

5. தீவிரம் (Aggressive):

எப்போதும் அதிக இடர்நேர்வை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுடன், கணிசமான சிறந்த வருமானத் திரும்பல்களை எதிர்பார்க்கின்றது.   

முதலீட்டு இடர்நேர்வுகளைப் புரிந்து கொள்ளல்   

சந்தை இடர்நேர்வு (Market risk):

இத்தகைய சந்தை இடர்நேர்வை முறையான இடர்நேர்வு (Systematic risk) என அழைப்பர். வழமையான குறித்த சந்தையுடன் தொடர்புபடுகின்ற இடர்நேர்வு வகையைக் குறிப்பிடலாம். பொருளாதார, புவியியல், அரசியல், சமூகம், சந்தைக் காரணிகள் போன்றவற்றிலிருந்து இத்தகைய இடர்நேர்வானது பிறப்பிக்கப்படுகின்றது.   

வட்டிவீத இடர்நேர்வு (Interest rate risk):

வட்டிவீதங்களில் ஏற்படுகின்ற அசைவுகள், வங்கி வைப்புகள், பங்குகள், கடன்பிணையங்கள், காணிகட்டடங்கள் போன்ற பரந்துபட்ட முதலீடுகளில் கணிசமான அளவு தாக்கத்தைச் செலுத்துகின்றது.  

வட்டிவீத அசைவுக்கும் பிணையங்களின் சந்தை விலைக்கும் இடையில் எதிர்மறையான அசைவைக் அவதானிக்கலாம்.   

(மிகுதி அடுத்த வாரம் தொடரும்)  

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X