Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலைபேசி தொழில்நுட்பத்தின் பிரதான செயற்பாடுகளுக்கு அப்பால் சென்ற சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். கடந்த காலங்களில் தனி நபருடைய தொலைத்தொடர்பை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தச் சாதனம் இன்று சமூகத்தின் மாற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகள், கல்வி, தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்காக தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் அடிப்படையாக உருவெடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றம், எதிர்காலத்தின் அதன் வடிவம், பொருளாதாரத்துக்கு அதனால் ஏற்படும் அழுத்தம் தொடர்பாக, Airtel Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஜினேஷ் ஹேக்டே தெளிவுபடுத்துகிறார்.
பலமான டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி செல்கையில் இலங்கையின் தற்போதைய முன்னேற்றத்தை எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள்?
முதலாவதாக, நாங்கள் டிஜிட்டல் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதை விரிவாகக் கூறினால், உற்பத்தி நடவடிக்கைகளின் போது பிரதான ஒத்துழைப்பு காரணியாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தகவல், அறிவியல் பயன்படுத்தப்பட்டால் அதில் டிஜிட்டல் பொருளாதாரம் காணப்படும் என எம்மால் கூறமுடியும். கடந்த சில வருடங்களாக இலங்கையின் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றுக்குள் டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவி வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.
அதனால், அலைபேசி புரோட்பான்ட் அடிப்படை வசதிகளை விஸ்தரித்தல், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் ஸ்மார்ட் அலைபேசிகள் சந்தைக்கு அறிமுகமாகியமை ஆகிய விடயங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் கடந்த காலங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாரம்பரிய கட்டணம், பெக்கேஜ் இணைப்புக்கள் விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தியதுடன், தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. அதன்படி நாம் பார்க்கும்போது, இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பதுடன் தற்போது பொருள்கள், சேவைகள் துரிதமாக டிஜிட்டல் மயமாகியுள்ளதை கவனிக்க முடிகிறது.
இந்த புதிய சவாலை எதிர்கொள்வதற்காக பாரம்பரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
இதன்போது, வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட முறைகளில் இருந்து புதிய கேள்விகளை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவை வழங்களை நோக்கி அவர்கள் தமது கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது வலைப்பின்னல் சேவையில் இருந்து பயனர் சேவைக்கு மாற்றமடைவதாகும்.
விசேடமாக பயனர்களுக்கு இல்லாவிட்டால், டிஜிட்டல் பாவனையாளர்களுக்கு நிரந்தர பெறுமதியான மதிப்பை உருவாக்கக் கூடிய புதிய கண்டுபிடிப்பொன்று தொடர்பில் தொலைத்தொடர்பு நிறுவன செயற்பாட்டாளர்கள் கவனம் செலுத்தவேண்டும்.
நகரத்தில், கிராமிய புறங்களில் தொலைத்தொடர்பு தகவல்களை பயன்படுத்துவது தொடர்பில் இடைவெளி காணப்படுகிறதா?
பொதுவாக அனைத்து வாடிக்கையாளர்கள் மத்தியில், இதுதொடர்பில் சீரான நடத்தைக் கொண்டவர்களை அவதானிக்க முடிகிறது. தொலைத்தொடர்பு சேவைகளின் பிரதான இரு பிரிவுகளான குரல், தரவு (Data) சேவைகளை கவனிக்கும் போது பெரும்பாலான பாவனையாளர்கள் தற்போது தரவு (Data) பாவனையில் அதிக கவனம் செலுத்துவதை எம்மால் காணமுடிகிறது. என்றபோதிலும் நகர, கிராமிய புறங்களில் தரவு (Data) பாவனையில் தெளிவான மாற்றமொன்றை அவதானிக்க முடிவதுடன் Data பாவனையில் 70% சதவீதம் நகர மாவட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதை எம்மால் காணமுடிகிறது. என்றபோதிலும் இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக Airtel நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கல்வி தொடர்பில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தாக்கம் என்னவாக இருக்கிறது?
முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது, தற்போதைய தலைமுறையினர் புதிய தொழில்நுட்பத்தை மிகவும் துரிதமாக புரிந்து கொண்டுள்ளதோடு அவர்களது பெரும்பாலான நடவடிக்கைகளை புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளனர்.
எனினும் கல்வி செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கினால் கல்வி வகுப்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் பல்வேறு வழிகளில் அதனை விஸ்தரிக்க வேண்டும். அதுபோலவே கல்வி தொடர்பாக நீண்டகால திட்டங்கள் இருக்க வேண்டியுள்ளதுடன் ஸ்மார்ட் பாடசாலை போன்ற திட்டங்கள் டிஜிட்டல் கல்வியின் சாதகமான திருப்பு முனையாக கூறமுடியும். அத்துடன் கல்வியென்பது வாழ்நாள் முழுவதுமாக மேற்கொள்ள வேண்டியதொன்று என்பதனால் எமது Airtel ஊழியர்கள் சார்பாக அவ்வாறான டிஜிட்டல் தொலைதூர கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
டிஜிட்டல் பொருளாதாரத்துக்குள் வேலை வாய்ப்புத் தன்மையில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும்?
தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான பழக்கமான கால அட்டவணையைக் கொண்டிருப்பதோடு டிஜிட்டல் பொருளாதாரத்தில் இது நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய கால அட்டவணைக்கு மாற்றமடைந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது.
அதேபோல் பாரம்பரிய பதவி நிலையில் மாற்றங்களை காண்பதோடு நிறுவனங்கள் அல்லது அமைப்புக்களின் கட்டமைப்புக்கள் ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. அத்துடன் லெப்டொப் கணினி மூலம் தமது சேவையை வீட்டிலிருந்தே வழங்கும் இளம் தலைமுறையினர் தற்போது துரிதமாக வளர்ச்சியடைந்து காணப்படுவதுடன் எதிர்காலத்தில் இதன் சதவீதம் மேலும் அதிகரிக்கும். அதேபோல் எமது டிஜிட்டல் தொழில்துறை குறித்து கதைப்பதென்றால் இதற்கு முன்னர் நாங்கள் கேள்விப்படாத தொழில்கள் தற்போது வேலை வாய்ப்புச் சந்தைக்கு வந்துவிட்டன.
இது பயன்பாட்டு மேம்பாட்டாளர்களிடமிருந்து தொழில்முறை ஈ-விளையாட்டு விமர்சகர்கள் வரை வளர்ந்துள்ளது. உண்மையிலேயே இவை அனைத்தும் மிகவும் வேகமாக மாற்றமடைந்துள்ளன. நாங்கள் செய்யவேண்டியது அதற்காக எமது இளம் தலைமுறையினரை உரிய விதத்தில் திட்டமிட்டு தயார்படுத்துவதே ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago