2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

’The Seasons Colombo Eight’ உடன் அதிசொகுசு வாழிட அனுபவம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 13 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

Prime Lands Residencies PLC, தனது ‘The Seasons Colombo Eight’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொழும்பு 8 இன் பெருமைக்குரிய வதிவிடப் பகுதியில், அதி-சொகுசு வாழிட அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த நவீன கட்டடக் கலை அம்சம் அமைந்துள்ளது.

கொழும்பு 08 பிரதேசத்தின் சந்திரலேகா மாவத்தை மற்றும் ஃபெயார்ஃபீல்ட் கார்டன்ஸ் போன்ற மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அமைக்கப்பட போகின்றது. வதிவிடத் தொகுதியாக அமைந்துள்ள ‘The Seasons Colombo Eight’ இனூடாக, பிரத்தியேகமான, உள்ளக மற்றும் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க சொகுசான வாழிட அனுபவங்கள் கொழும்பின் பிரதான பகுதியில் வழங்கப்படுவதுடன், மட்டுப்படுத்தப்பட்ட 44 வசிப்பிடப் பகுதிகளை மட்டும் வழங்குகின்றது.

வதிவிடங்கள் அனைத்தும், 2000 சதுர அடிப்பரப்பில், மிகச் சிறந்த சௌகரியத்தை வழங்கக்கூடிய வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய நிர்மாணத் திட்டம் தொடர்பில் Prime Lands Residencies PLC பணிப்பாளர் ஷெஹானா ப்ராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “44 வசிப்பிடங்களை மட்டும் கொண்ட ‘The Seasons Colombo Eight’ எனும் அதிசொகுசு வசிப்பிடத் தொகுதியை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். சொகுசான வாழிட அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் அமைந்துள்ளது. ஒப்பற்ற அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிர்மாணத் திட்டம் அமைந்துள்ளது. கொழும்பின் மற்றுமொரு புகழ்பெற்ற முகவரியை பெற்றுக் கொடுப்பதில் நாம் புதிய நியமத்தை ஏற்படுத்தியுள்ளோம்.” என்றார்.

வசிப்பவர்களுக்கு சொகுசான வாழிட அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், ஒவ்வொரு வாழிடப்பகுதியும், பிரத்தியேகத்தன்மையை பெற்றுக் கொடுப்பதாக அமைந்திருக்கும். ஒவ்வொரு அலகுகளும் timber flooring, designer walk in closets மற்றும் fully-fitted pantries ஆகியவற்றுடன் அடுத்த தலைமுறை சாதனங்களையும் கொண்டிருக்கும். சிறந்த உணவு தயாரிப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக Quartz worktops கொண்டிருக்கும்.

நவீன ஸ்மார்ட் வாழிட அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில், ‘The Seasons Colombo Eight’ இல் மதிநுட்பமான வீட்டு automation கட்டமைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் குளியலறைகளில் ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் ஸ்மார்ட் பூட்டுகள் போன்றன அடங்கியுள்ளன. Designer குளியலறை சாதனங்கள் மற்றும் heated towel railings போன்றன வாழ்க்கை முறை அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.

தமது ஒவ்வொரு தேவையையும் நிவர்த்தி செய்யக்கூடிய உலகத் தரம் வாய்ந்த வாழிட அனுபவத்தை வசிப்போர் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், வசிப்பவர்களுக்கு ஒவ்வொரு இல்லத்துக்குமான பிரத்தியேகமான களஞ்சியப்படுத்தல் பகுதிகள் காணப்படுவதுடன், நாள் வேலையாள் அறை, சாரதி அறை, வரவேற்பு பகுதி, பிஸ்னஸ் லோஞ்ச் மற்றும் வைபவ மண்டபம் ஆகியனவும் அடங்கியிருக்கும். மொட்டைமாடிப் பகுதியில், இலங்கையில் முதன் முறையாக wave pool உடன், சிறுவர் நீச்சல் தடாகம், சகல வசதிகளையும் கொண்ட உடற்பயிற்சி நிலையம், கேமிங் பகுதியுடன், Bottle Bank பகுதியைக் கொண்ட நிறைவேற்று லோஞ்ச் பகுதி, Coffee Station மற்றும் கரோக்கே லோஞ்ச் ஆகியவற்றுடன், பிஸ்னஸ் லோஞ்ச் பகுதியும், சந்திப்பு அறையும் காணப்படும். மொட்டை மாடிக்கு மேலான பகுதியில் நடைபகுதி மற்றும் யோகா திடல் போன்றன காணப்படும், இவற்றினூடாக வசிப்போருக்கு ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்காக போதியளவு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஒப்பற்ற சொகுசுடன், நவீன வசதிகளையும் கொண்டு நகரின் பிரதான பகுதியில் நிர்மாணிக்கப்படும் ‘The Seasons Colombo Eight’, நிகரற்ற நகர வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .