2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

Sun Siyam பாசிகுடா மனம்மறவாத பண்டிகைக் காலத்தை ஏற்படுத்தவுள்ளது

Freelancer   / 2024 நவம்பர் 29 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள Sun Siyam பாசிகுடா, பண்டிகைக் காலத்தை மனம்மறவாத கொண்டாட்டங்களுடன் அனுபவித்து மகிழ இணைந்து கொள்ளுமாறு அழைத்துள்ளது.  இத்தாலிய பொப் பாடகரும் பாடல் எழுத்தாளருமான Matilde G மற்றும் இலங்கையின் DJ மற்றும் இசையமைப்பாளருமான DJ Rapa ஆகியோர், Sun Siyam பாசிகுடாவில் டிசம்பர் மாதத்தை மனம் மறவாத அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க கைகோர்க்கவுள்ளனர்.

 

விருந்தினர்களுக்கு டிசம்பர் 21ஆம் திகதி Sun Siyam பாசிகுடாவில், உலகளாவிய ரீதியில் பல மேடைகளில் கச்சேரிகளை முன்னெடுத்துள்ள இத்தாலிய பொப் பாடகர் மற்றும் பாடலாசிரியரான Matilde G பங்கேற்று மகிழ்விக்கவுள்ளார். இவர் துபாயில் மத்திய கிழக்குக்கு அப்பால் வசிக்கும் சிறந்த பாடகருக்கான "MUSIVV Award 2023" விருதை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. யுனிவர்சல் மியுசிக் குரூப்பினால் விநியோகிக்கப்பட்ட சுயாதீன கலைஞரான இவரின் இசை 10 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளதுடன், 8 மில்லியனுக்கு அதிகமான YouTube பார்வைகளையும் பெற்றுள்ளது. மாலைதீவுகளில் Sun Siyam ரிசோர்ட் உடன் Matilde கைகோர்த்து, சிங்கப்பூர் 2023 Formula 1 Grand Prix போன்ற உயர்மட்ட நிகழ்வுகளில் கச்சேரிகளை முன்னெடுத்துள்ளார். அதனூடாக, வளர்ந்து வரும் சர்வதேச நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

 

Sun Siyam பாசிகுடாவில் நத்தார் தினத்துக்கு முதல் நாள் மாலைப் பொழுதில் Matilde G மீண்டும் இணைந்து, இலங்கையின் புகழ்பெற்ற DJ மற்றும் இசையமைப்பாளரான DJ Rapa உடன் நத்தாரை வரவேற்பதற்கான இரவு கொண்டாட்டங்களில் பங்கேற்பார். அன்றைய தினத்தில் சிறுவர்களுக்கும் வயது வந்தவர்களுக்கும் Xmas cookie தயாரிப்பு வகுப்பையும் ஹோட்டல் முன்னெடுக்கும்.

நத்தார் தினத்தன்று, விருந்தினர்களுக்கு மனம் மறவாத பண்டிகை மதிய உணவு வேளையை அனுபவிக்க முடியும். அதற்கு முன்னதாக நீச்சல் தடாகத்தை அண்மித்த பகுதியில் DJ RAPA இன் நேரலை DJ இசை நிகழ்வுகள் இடம்பெறும். மாலையில், BBQ இராப் போசணத்துடன், நத்தார் தாத்தாவின் வருகைக்கான களிப்பூட்டும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், விருந்தினர்களுக்கு Aqua Lounge பகுதியில் சூரியன் மறையும் வேளையில் இனிய cocktailகளை அனுபவிக்க முடியும்.

வருட நிறைவை கொண்டாடும் வகையில் Sun Siyam பாசிகுடா நாள் முழுவதும் பல கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. சிறுவர்களுக்கு கொண்டாட்டத்தை வழங்கும் வகையில், களிப்பூட்டும் அம்சங்கள் நிறைந்த புதையல் தேடலில் பங்கேற்க முடியும் என்பதுடன், ஏனைய அனைவரும் நீச்சல் தடாகத்துக்கு அருகாமையில் ஓய்வான DJ இசையை ரசிக்க முடியும். டிசம்பர் மாத இறுதி நாள் மாலைப் பொழுதில் புதுவருடத்தை வரவேற்கும் வகையில் மாபெரும் இராப்போசண நிகழ்வு கரையோரப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 2025 ஐ வரவேற்பதற்கான நேரம் அறிவிப்பும் இடம்பெறும். புதுவருடத்தை குறிக்கும் வகையில், விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பால் பொங்கி இலங்கையின் பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். அதனைத் தொடர்ந்து புது வருடத்தின் முதலாவது காலை உணவு பரிமாறப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X