Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 18, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூன் 28 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதன் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலைபேறான தொழிற்துறை அபிவிருத்திக்கான பசுமை தொழிற்துறை செயற்பாடுகளுக்கான சர்வதேச அமர்வின் போது, Star Garments குழுமம் (“Star”) கட்டுநாயக்கவில் கொண்டுள்ள தனது புத்தாக்க நிலையத்துக்கு “தொழிற்துறையில் வலுச் சிக்கனம்” எனும் பிரிவில் வெள்ளி விருதை சுவீகரித்திருந்தது. உலகின் முதலாவது ‘Passive house factory building’ ஆக அமைந்திருப்பதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் முதலாவது ‘Passive House Design’ ஆகவும் இது அமைந்துள்ளது. பிந்திய LEED V4 இன் கீழ் சான்றளிக்கப்பட்ட முதலாவது LEED Platinum building ஆகவும் இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்வு தொழிற்துறை அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தொழிற்துறை அமைச்சு ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2024 ஜுன் 20, 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
தொழிற்துறை என்பது பெருமளவில் வலு நுகரும் வாடிக்கையாளராக அமைந்துள்ளது. தனது பழைய தொழிற்சாலையை புதுப்பிக்கும் போது passive house கொள்கைகளை பயன்படுத்தி, அதன் வலுச் சிக்கனம் மற்றும் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைப்பது தொடர்பில் புத்தாக்கமான வழிமுறையை Star Garments பின்பற்றியிருந்தது. அதன் புத்தாக்க நிலையத்தில் இந்த கொள்கைகளை பின்பற்றியிருந்தமையினூடாக, வலுப் பாவனையில் 70 சதவீதம் வரையில் குறைவு ஏற்பட்டிருந்ததுடன், பாரம்பரிய “சிக்கனமான” நவீன தொழிற்துறைசார் கட்டிடத்துடன் ஒப்பிடுகையில், பூஜ்ஜிய kWh/m2a வெப்ப கேள்வியை கொண்டதாக அமைந்திருந்தது. இதனூடாக பச்சைஇல்ல வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் தொழிற்பாட்டு செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருந்தன. மேம்படுத்த உள்ளக சூழல் தரம், ஊழியரின் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு மற்றும் தொழில்சார் சுகாதாரத்தை மேம்படுத்தல் போன்றவற்றை ஏற்படுத்தியிருந்தது.
Passive house design இனால் சிறந்த அகத்துறிஞ்சல், காற்றழுத்தம் மற்றும் வெப்ப மீட்சி கட்டமைப்புகள் போன்றன உறுதி செய்யப்பட்டு, வலு நுகர்வை குறைத்து, வெப்பவலயங்களில் தொழிற்துறைசார் கட்டிடங்களுக்கு புதிய நியமங்களை ஏற்படுத்தியுள்ளது. Star இன் புத்தாக்க நிலையத்துக்கு, 2020 AIA New York (AIANY) நிலைபேறாண்மைக்கான மெரிட் விருது வழங்கப்பட்டதுடன், 2021 Passive House சர்வதேச விருதும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டில் புத்தாக்க நிலையத்தை நிறுவியிருந்ததை தொடர்ந்து, நிலைபேறான தொழிற்துறையாக திகழ்வதற்கு தொடர்ந்தும் முதலீடுகளை Star மேற்கொண்ட வண்ணமுள்ளது. இன்று அதன் எட்டு தொழிற்சாலைகள் LEED சான்றளிக்கப்பட்டவையாக அமைந்திருப்பதுடன், அதில் இரண்டு பிளாட்டினம் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி விருதையும் பெற்றுள்ளன. மேலும், காலநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதற்காக, விஞ்ஞான அடிப்படையிலான இலக்குகள் செயற்திட்டத்துக்கு (SBTi) Star தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், தனது சகல செயற்பாடுகளிலும் 5 வருடங்களாக காபன் நடுநிலையை பேணி வருகின்றது. 4.9 மெகா வாற்று கூரைமீதான சூரியமின் பிறப்பாக்கிகளில் முதலீடு செய்திருந்ததனூடாக, காபன் வெளியீட்டை குறைக்கும் செயற்பாடுகளையும் Star முன்னெடுக்கின்றது. தனது பாரிய தொழிற்சாலையில் biomass boilers பயன்படுத்த மாறியிருந்தது.
World Resources Institute இன் Aqueduct tool இனால் இலங்கை நீர் இடர் நிறைந்த நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் Star இனால் கழிவுநீர் மீள்சுழற்சி மற்றும் AHU Drain நீரை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி 54 மில்லியன் லீற்றர் நீர் சேமிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
20 minute ago
2 hours ago