Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 15, புதன்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 15 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL eTeleshop, அண்மையில் நடைபெற்ற BestWeb.LK 2023 நிகழ்வில் “சிறந்த e-வணிக இணையத்தளம்” எனும் பிரிவில் விருதை சுவீகரித்திருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்வு Monarch Imperial ஹோட்டலில் நடைபெற்றது.
டிஜிட்டல் பிரிவில் சிறப்புக்கான அர்ப்பணிப்பு, பாவனையாளர் அனுபவம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் இணையத்தளத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த விருது வெளிப்படுத்தியிருந்தது. முக்கியமாக, SLT-MOBITEL eTeleshop’இன் இணையத்தளம் தனித்த இணையப் பக்கமாக இயங்க ஆரம்பித்து மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
BestWeb.LK போட்டியை, LK Domain Registry ஏற்பாடு செய்திருந்ததுடன், இலங்கையின் முன்னணி இணையத்தள வடிவமைப்பு போட்டியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டில் வடிவமைக்கப்படும் இணையத்தளங்களின் தரம், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், பாவனையாளருக்கு நட்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. 13ஆவது வருடமாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போட்டி, கடுமையான மத்தியஸ்த தெரிவை பின்பற்றியிருந்ததுடன், இதில் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு, பொருளடக்கம், பாவனையாளர் ஈடுபாடு, மொபைல் செம்மையாக்கம், இணையத்தள பார்வை மற்றும் சமூக நோக்கம் போன்றவற்றை பின்பற்றியிருந்தது. விதிமுறை மீறல்கள் மற்றும் தவறான செயன்முறைகளை பின்பற்றியிருந்தவர்களுக்கு தண்டங்கள் பிரயோகிக்கப்பட்டதுடன், சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த இணையத்தளங்கள் கௌரவிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.
தரம், தங்கியிருக்கும் திறன் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் கவனம் செலுத்தியிருந்த eTeleshop, தொலைத்தொடர்பாடல் சாதனங்கள் மற்றும் பிரத்தியேக மின்சாதனங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு, ஒப்பற்ற மற்றும் வெகுமதியளிக்கும் ஒன்லைன் சொப்பிங் அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. இந்த கௌரவிப்பை கொண்டாடும் வகையில், தொடர்ந்தும் விரிவாக்கமடைந்து செல்லும், உயர் தரமான தயாரிப்புகள் மற்றும் ஒப்பற்ற ஒன்லைன் சொப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் SLT-MOBITEL eTeleshop கவனம் செலுத்தி, தொழில்நுட்ப மற்றும் e-வணிக பிரிவை மேம்படுத்தும்.
eteleshop.slt.lk என்பது இலங்கையில் காணப்படும் மிகவும் பழமையான e-வணிக இணையத்தளங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. 18 வருடங்களுக்கு மேலாக செயலில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு வரை, இந்த இணையத்தளம் SLT கூட்டாண்மை தளத்தின் ஒரு அங்கமாக அமைந்திருந்ததுடன், 2019 ஆம் ஆண்டு முதல் தனியான இணையத்தளமாக இயங்க ஆரம்பித்திருந்தது.
கடந்த நான்கு (04) வருட காலப்பகுதியில், இணையத்தளம் “தொலைத்தொடர்பாடல் சாதனங்கள் மற்றும் பிரத்தியேக மின்சாதனங்கள் விற்பனை பகுதியாக” மாற்றியமைக்கப்பட்டிருந்ததுடன், மாதாந்தம் 50,000 பார்வையாளர்களையும் பதிவு செய்கின்றது. SLT-MOBITEL வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் பரந்தளவு தயாரிப்புகள் மற்றும் Wi-Fi சாதனங்கள், தொலைபேசி சாதனங்கள், power backups, powerline devices, internet security products மற்றும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது.
மேலும், விற்பனையாளர்களுக்கு தமது விற்பனைப் பகுதிகளை eTeleshop ஊடாக நிர்வகித்துக் கொள்ளும் வாய்ப்பையும் இந்த இணையத்தளம் வழங்கியிருந்தது. நியம e-வணிக உள்ளம்சங்கள் பலதையும் இந்த இணையத்தளம் கொண்டிருந்ததுடன், தொழிற்துறை நியமங்களுக்கமைய இவை அமைந்துள்ளன. சகல eTeleshop தயாரிப்புகளும் உத்தரவாத காலப்பகுதியை கொண்டுள்ளதுடன், புகழ்பெற்ற SLT-MOBITEL விற்பனைக்கு பிந்திய வாடிக்கையாளர் ஆதரவையும் கொண்டுள்ளன.
தனித்த இணையத்தளமாக அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் சிறந்த பயணத்தை SLT-MOBITEL eTeleshop முன்னெடுத்திருந்தது. BestWeb.LK 2023 விருதுகள் வழங்கும் நிகழ்வில் மெரிட் விருதை சுவீகரித்திருந்தமையானது, பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற ஒன்லைன் சொப்பிங் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக eTeleshop செயற்பாடுகளை உறுதி செய்வதற்காக பணியாற்றிய அணியினரின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago