Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 05, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 10 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL Nebula Institute of Technology, தனது வருடாந்த பட்டமளிப்பு விழாவை அண்மையில் முன்னெடுத்திருந்தது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான கேட்போர்கூடத்தில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தமது உயர் கல்வியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கும் வைபவத்தினூடாக அவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வழிகோலப்பட்டிருந்தது. வர்த்தக நாமத்தின் மீளறிமுகத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட முதலாவது பட்டமளிப்பு வைபவமாக இந்நிகழ்வு அமைந்திருந்ததுடன், கல்வியகத்தைப் பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகவும் அமைந்திருந்தது.
நிகழ்வின் சிறப்பு அதிதியாக பிரித்தானியாவின் ஹேர்ட்ஃபோட்ஷயர் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல், பொறியியல் மற்றும் கணனி விஞ்ஞான பாடசாலையின் பீடாதிபதி பேராசிரியர். டேனியல் மெக்கிளஸ்கி கலந்து கொண்டதுடன், விசேட உரையையும் ஆற்றியிருந்தார்.
பல்வேறு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறியியல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்துடன் தொடர்புடைய கற்கைகளை கல்வியகத்தில் பூர்த்தி செய்திருந்த மாணவர்களுக்கு இந்த வைபவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்திருந்தது. இந்தக் கற்கைகளில், பிரித்தானியாவின் ஹேர்ட்ஃபோட்ஷயர் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட BEng (Hons) பட்டக் கற்கை மற்றும் BTEC Higher National Diploma (HND) in Electrical and Electronic Engineering மற்றும் பிரித்தானியாவின் Pearson இனால் வழங்கப்படும் BTEC Higher National Diploma (HND) in Digital Technologies போன்றனவும் அடங்கியிருந்தன. இந்த ஆண்டின் நிகழ்வு இலங்கையின் அடுத்த தலைமுறை தொழினுட்ப தலைமுறையை ஊக்குவிக்கும் உறுதிமொழியை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
இந்த பட்டமளிப்பு விழாவில், 159 பட்டதாரிகளுக்கு பட்டம் சூடப்பட்டிருந்தது. இதில் 23 பேர் SLT-MOBITEL இன் ஊழியர்களாக திகழ்கின்றனர். இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப துறையின் விருத்திக்கு ஆதரவளிக்கும் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரிவுகளில் தமது தொழில்வாழ்க்கையை வழியமைத்துக் கொள்வதில் உதவுவதற்கு அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பிராந்தியத்தில் தொழினுட்ப மையமாக திகழ இலங்கை முயற்சிக்கும் காலகட்டத்தில், SLT-MOBITEL Nebula Institute of Technology போன்ற நிறுவனங்களின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
கல்விச் சிறப்பை கொண்டாடும் வகையில், மூன்று மாணவர்களுக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவின் ஹேர்ட்ஃபோட்ஷயர் பல்கலைக்கழகத்தின் Bachelor of Engineering (Honours) in Electrical and Electronic Engineering கற்கையில் சிறப்பாக செயலாற்றியிருந்த சிறந்த மாணவருக்கான விசேட விருது ஹபரகடகே ஜனக சத்துரங்க அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டிருந்தது. Pearson BTEC தகைமைகளில், Level 5 Higher National Diploma in Engineering (Electrical and Electronic Engineering) இல் சிறந்த கல்விசார் செயற்பாட்டுக்கான தங்கப் பதக்கத்தை ஹெட்டி ஆரச்சிகே திலீஷ ஷெனால் அஹின்ச பெரேரா பெற்றுக் கொண்டார். Level 5 Higher National Diploma in Digital Technologies இல் சிறந்த கல்விசார் செயற்பாட்டுக்கான தங்கப் பதக்கத்தை உடவல ஹேவாயலாகே இரேஷா தில்ருக்ஷி டி சில்வா பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு PEO TV நாளிகை 20 ஊடாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. YouTube மற்றும் Facebook Live ஊடாகவும் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டதுடன், நிகழ்வில் பரந்தளவானோர் இணைந்து கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. மாணவர்களின் சிறந்த சாதனைகளின் கொண்டாட்டமாக இந்த பட்டமளிப்பு வைபவம் அமைந்திருந்தது. மேலும், Nebula Institute இன் கல்வி மற்றும் மாணவர்களுக்கு தமது பொறியியல் கனவுகளையும், எதிர்கால வெற்றிகளையும் எய்துவதற்கு உதவுவதாகவும் அமைந்திருந்தது.
இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப கல்வியை பொறுத்தமட்டில் SLT-MOBITEL Nebula Institute of Technology முன்னோடியாக திகழ்கின்றது. தொழினுட்ப துறையின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பரந்தளவு கற்கைகளை வழங்குகின்றது. மாணவர்களுக்கு கோட்பாட்டு அறிவு மற்றும் பிரயோக திறன்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கற்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேகமாக மாற்றமடைந்து வரும் தொழினுட்ப கட்டமைப்பில் வெற்றிகரமான தொழில் வாய்ப்புகளுக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு உதவுகின்றது. Robotics and Artificial Intelligence, Data Science மற்றும் Digital Technologies போன்ற எதிர்கால தொழில் சந்தைகளுக்கு பொருத்தமான பரந்தளவு கற்கைகளை கல்வியகம் வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
58 minute ago
2 hours ago