Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 05 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Pearson BTEC உயர் கல்வி அமர்வு 2023 இல், SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL Nebula Institute of Technology க்கு இரட்டை கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் Pearson இன் சிரேஷ்ட பிரதிநிதிகளான ஐக்கிய இராஜ்ஜியத்தின் வணிக அபிவிருத்தி மற்றும் சர்வதேச பணியாளர் திறன்கள் உப தலைவர் ஜேன் பேக்கர், Pearson தெற்காசியா தொழில் வாய்ப்புகள் மற்றும் தகைமைகள் பணிப்பாளர் பிரெமிளா போல்ராஜ், BTEC, PTE and HEd Courseware Pearson பிரதி பொது முகாமையாளர் சூரியா பிபிலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனது புதிய நிலைக்கு மாற்றம் பெறுவதற்கு முன்னர் பேணியிருந்த நிலைக்காக கௌரவிப்பை முன்பு SLTTC என அறியப்பட்ட கல்வியகம் பெற்றுக் கொண்டது. மேலும், SLT-MOBITEL Nebula Institute of Technology நிறுவப்பட்டது முதல், இரு புதிய கற்கைகள் அறிமுகம் அடங்கலாக பல முக்கிய சாதனைகளை பதிவு செய்துள்ளது.
சிறப்பாக செயலாற்றியிருந்தமைக்கான வெண்கல விருது அடங்கலாக, SLT-MOBITEL Nebula Institute of Technology இனால் பெற்றுக் கொண்ட சில முக்கிய சாதனைகளை கௌரவிப்பைப் பெற்றிருந்ததுடன், சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் தனது பதிவுகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாக அதிகரித்திருந்தது. தொழில்நுட்ப கல்வி மற்றும் இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச மட்டத்தில் திறன் மேம்பாட்டை பெற்றுக் கொள்வதற்கான தனது அர்ப்பணிப்பையும் இந்த விருது உறுதி செய்திருந்தது.
மேலும், கடந்த ஆண்டில் மேற்கொண்டிருந்த சிறந்த பங்களிப்புகளுக்காக SLT-MOBITEL Nebula Institute of Technology க்கு ‘Emerging Centre of the Year 2022’ எனும் உயர் கௌரவிப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதினூடாக, Pearson Level 03 International Foundation மற்றும் Pearson BTEC Level 05 Higher National Diploma in Digital Technologies ஆகியவற்றை அறிமுகம் செய்வதற்காக நிறுவனம் காண்பித்திருந்த அர்ப்பணிப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், Pearson BTEC Level 05 HND in Electrical & Electronics என்பதற்கு ஏற்ற தகைமையான NVQ நிலை 6 தகைமைகளை அறிமுகம் செய்து புத்தாக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது.
பாடப்பரப்பு சிறப்பு, மாணவர் சித்தி எதிர்பார்ப்புகள் மற்றும் கல்வியகத்தின் போட்டிகரமான நிலைப்பாடு மற்றும் வர்த்தக நாம கீர்த்தி நாமம் ஆகியவற்றை உறுதி செய்வதாக Pearson கௌரவிப்பு அமைந்துள்ளதுடன், சர்வதேச மட்டத்தில் இணைப்பைப் பேணும் பயிற்சி நிலையம் எனும் வகையில் தேசிய மற்றும் தனிநபர் நிலைகளை பேணுவதிலும் கவனம் செலுத்துகின்றது.
பரந்தளவு கற்கைகத் தெரிவுகளை வழங்கும் SLT-MOBITEL Nebula Institute of Technology, தனிநபர்களுக்கு அவசியமான அத்தியாவசிய திறன்கள் மற்றும் அறிவை பெற்றுக் கொடுத்து, சமூகத்துக்கு நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் Hertfordshire பல்கலைக்கழகத்தின் BEng (Hons) பட்டப்படிப்பு மற்றும் Pearson BTEC HND Electrical and Electronic Engineering மற்றும் Pearson BTEC Digital technologies போன்ற கற்கைகளையும் வழங்குகின்றது.
தேர்ச்சி பெற எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு, முன்னணி கல்விப் பங்காளராக கல்வியகம் திகழ்கின்றது. சிறப்புக்கான அர்ப்பணிப்பு மற்றும் நவீன பாடங்களை அறிமுகம் செய்தல் போன்றவற்றில் உறுதியான அர்ப்பணிப்பை கொண்டுள்ளதுடன், நிலையத்தினால் மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்கு உகந்த சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன், வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago