Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 29 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL Enterprise இனால் SME Solution Partners’ Demo Day 2024 அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை முழுவதிலும் காணப்படும் பரந்தளவு நிறுவனசார் வாடிக்கையாளர்களுக்கு காணப்படும் பல்வேறு வியாபாரத் தீர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. பதிவு செய்திருந்த தீர்வுப் பங்காளர்களை இந்நிகழ்வு ஒன்றிணைத்து, வியாபார முன்னிலையாளர்களுக்கு நவீன தீர்வுகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், அதில் கணக்கு முகாமையாளர்கள், தீர்வு பொறியியலாளர்கள் மற்றும் பிராந்திய விற்பனை மற்றும் செயற்பாட்டு அணியினர் என பலரும் அடங்கியிருந்தனர்.
Demo Day 2024 என்பது, SLT-MOBITEL Enterprise இன் விற்பனை மற்றும் செயற்பாட்டு அணியினரின் ஆழமான அறிவைக் கொண்டு, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு புரட்சிகரமான பங்காளர் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது மற்றும் இலங்கை முழுவதிலும் பரிபூரண வியாபார தொழில்நுட்ப தீர்வுகளை விநியோகிக்கும் நிறுவனத்தின் ஒப்பற்ற கொள்ளளவை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. வியாபாரங்களின் பரந்தளவு தீர்வுகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில், மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க தொழில்நுட்ப தீர்வுகள் தொடர்பில் நிபுணத்துவ வழிகாட்டல்களை நிறுவனம் வழங்குவதை வெளிப்படுத்துவதாக இந்த மூலோபாய செயற்திட்டம் அமைந்திருந்தது. அதனூடாக, வியாபாரங்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான தொழில்நுட்ப தீர்வுகளுக்கான நிபுணத்துவ வழிகாட்டலுக்கு வலுவூட்டி, வியாபாரங்களுக்கான முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் SLT-MOBITEL இன் நிலையை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
SLT-MOBITEL Enterprise இனால் ஒற்றை நிலை பொறுப்புக்கூறல் மற்றும் ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களின் பல்வேறு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகாமைத்துவ தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதை விளக்கும் வகையில் Demo Day அமைந்திருந்தது. SLT-MOBITEL வலையமைப்பின் ஏற்றுக் கொள்ளத்தக்க பங்காளர்களிடமிருந்து தங்கியிருக்கக்கூடிய விற்பனைக்கு பிந்திய ஆதரவினூடாக வாடிக்கையாளர்கள் எவ்வாறு அனுகூலம் பெறலாம் என்பதை விளக்குவதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. அதனூடாக, தனிநபர் நிறுவன கட்டமைப்புகள் மிருதுவாகவும், வினைத்திறனாகவும் இயங்குவதை உறுதி செய்து கொள்ள முடியும் என்பதைப் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தது. மேலும், வியாபார தேவைகளுடன் பொருந்தும் வகையிலும், அதனூடாக வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை உருவாக்க முடிவது தொடர்பில் கவனம் செலுத்தும் பல்வேறு தீர்வுகளைப் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.
SLT-MOBITEL நிறுவனசார் வியாபார பிரதம வணிக அதிகாரி லக்மால் ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பங்காண்மை வழிமுறையுடன், நாம் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு மையமொன்றை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களின் தன்னிறைவு மற்றும் திருப்தியை மேம்படுத்தி, அதனூடாக அவர்களின் கொள்முதல் மற்றும் நிர்வாக செயன்முறைகளை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கின்றோம். இலங்கையில் வியாபாரங்களுக்கு முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக திகழ்கின்றமைக்கான எமது அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.” என்றார்.
இந்த பங்காளர் வலையமைப்பு மற்றும் உள்ளக நிபுணத்துவத்தை ஒன்றிணைத்து SLT-MOBITEL Enterprise இனால், நிறுவனசார் வாடிக்கையாளர்களுக்கு நவீன வியாபார தொழில்நுட்ப தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான தமது அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. Partner Demo Day 2024 இனால், சிக்கல்கள் இல்லாத, பரிபூரண தொழில்நுட்ப தீர்வுகளை நாடும் வியாபாரங்களுக்கான ஒரே சிறந்த தீர்வாளராக நிலைநிறுத்தும் SLT-MOBITEL Enterprise இன் நிலை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருமளவு பிராந்திய பிரசன்னத்துடன், SLT-MOBITEL Enterprise இனால் இந்த மேம்படுத்தப்பட்ட தீர்வுகள் வாடிக்கையாளர்களின் அருகாமையில் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதிலும் அணுகல் திறன் மற்றும் பிரத்தியேகமான சேவை போன்றன மேம்படுத்தப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago