Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 பெப்ரவரி 09 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரத்தியேக உதவி app ஆன Duthaya, தனிநபர்களுக்கு தமது தினசரி செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சௌகரியமான சேவைகளை வழங்குகின்றது.
அத்தியாவசிய ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் அல்லது விநியோகங்களை நிர்வகித்தல் போன்ற தினசரி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உடனடி உதவித் தேவையை கொண்டிருப்பவர்களுக்கும், உள்நாட்டில் சேவைகளிடையே காணப்படும் இடைவெளியை நிவர்த்திக்க Duthaya எதிர்பார்த்துள்ளது. ஒன்லைன் மற்றும் மொபைல் சந்தைப்பகுதிகள் போன்ற உள்நாட்டு சேவைகளுடன் பாவனையாளர்களை இணைப்பதாக Duthaya அமைந்துள்ளது. அதனூடாக இன்றைய வேகமாக நகரும் உலகில் நேரத்தை சேமிக்கும் சௌகரியத்துக்கான தீர்வை வழங்குகின்றது.
வங்கியியல், அரச ஆவணச் சேவைகள், வியாபாரத் தேவைகள், விநியோகங்கள், விற்பனையக கொள்வனவுகள் போன்ற சேவைகளை மேற்கொள்வதற்கான உதவிகளை தூதுவர்கள் அல்லது பிரத்தியேக உதவியாளர்களுடன் பாவனையாளர்களை இணைக்கும் நடவடிக்கைகளை Duthaya’s app மேற்கொள்கின்றது. வாடிக்கையாளர்கள் தமது app இல் கோரிக்கையை பதிவு செய்ததும், பயிற்சி பெற்ற தூதுவர் ஒருவர் பணிக்காக ஒதுக்கப்படுவார். அதனூடாக குறித்த பணிகள் முன்னெடுக்கப்படும். Duthaya இன் பிரதான வலிமை என்பது அதன் சகாயத்தன்மை, ஏனைய விநியோக சேவைகளில் கிடைக்காத ஆவணப்படுத்தல் சேவைகளுக்கான வசதியளிப்பு மற்றும் ஒட்டு மொத்த சௌகரியம் ஆகியன உறுதி செய்யப்படுகின்றன.
புத்தாக்கமான app இனூடாக வேலைப்பளு நிறைந்த தனிநபர்களின் நேரம் மீதப்படுத்தப்படுவதுடன், வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவது மற்றும் வெளிநாடுகளில் வசிப்போருக்கு இலங்கையில் பணிகளை முன்னெடுப்பது போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. கவர்ச்சிகரமான விலைகளில் சேவைகள் கிடைப்பதுடன், Duthaya இனால் சகாயமான சௌகரியமான கவனம் செலுத்துகையினூடாக வலுவூட்டல் மேற்கொள்ளப்படும்.
வாடிக்கையாளர்கள் தமது மொபைல் சாதனங்களில் Duthaya app ஐ டவுன்லோட் செய்து, கிடைக்கும் பல்வேறு சேவைகளிலிருந்து பயனை அனுபவிக்க ஆரம்பிக்க முடியும். SLT-MOBITEL வழங்கும் மற்றுமொரு டிஜிட்டல் முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது. Duthaya உடன் பணியாற்றுவதனூடாக, புத்தாக்கமான டிஜிட்டல் சேவைகளை மக்களின் விரல் நுனிகளுக்கு கொண்டு வந்து வாழ்க்கையை எளிமைப்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் அர்ப்பணிப்பை SLT-MOBITEL மீள உறுதி செய்துள்ளது. டிஜிட்டல் சேவை வழங்குநர்கள் எனும் வகையில், SLT-MOBITEL மற்றும் Duthaya சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியன இலங்கையில் டிஜிட்டல் வலுவூட்டலை செயற்படுத்துவதில் அதிகளவு கவனம் செலுத்த தம்மை அர்ப்பணித்துள்ளன.
இந்தப் பங்காண்மை தொடர்பில் SLT-MOBITEL பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “Duthaya app இனால் அணுகல் திறனில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சேவையினூடாக அரசாங்க, வங்கியியல், வியாபார ஆதரவு, மிருதுவான விநியோகம், விற்பனை நிலைய உதவி மற்றும் வினைத்திறனான வரிசை முகாமைத்துவம் போன்ற பணிகளை எளிமைப்படுத்தி, வேலைப்பளு நிறைந்த நபர்களுக்கு, முதியவர்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தல், சௌகரியத்துக்கு முன்னுரிமையளித்தல், பிரத்தியேகமயப்படுத்தல் போன்ற எமது சொந்த கொள்கைகளுக்கமைய இது அமைந்துள்ளது.” என்றார்.
Duthaya டிஜிட்டல் சேவைகள் பணிப்பாளர் தரீந்திர டி கல்பகே கருத்துத் தெரிவிக்கையில், “பிரத்தியேக உதவிச் சேவைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் SLT-MOBITEL உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு சௌகரியத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. வேகமாக நகரும் உலகில் சகாயமான, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய உதவிச் சேவையாக Duthaya ஆரம்பி்க்கப்பட்டது. Duthaya app ஊடாக “தூதுவர்களுடன்” இணைத்து, மக்கள் மற்றும் சேவைகளிடையே காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்கிறோம். இதில் ஆவணப்படுத்தல் செயற்பாடுகள், விநியோகங்கள், வங்கிச் சேவைகள் போன்றன அடங்கியுள்ளன. SLT-MOBITEL இன் நாடளாவிய ரீதியான சென்றடைவினூடாக, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்க்கையை எளிமைப்படுத்தல் எனும் எமது பகிரப்பட்ட இலக்கை மீள உறுதி செய்துள்ளோம். இந்த கைகோர்ப்பினூடாக எமது app இனால் மேலும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago