2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL நிறுவனத்துக்கு ‘சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருது 2023’

Freelancer   / 2024 மே 20 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலைபேறான வியாபார செயற்பாடுகளுக்கான சிறந்த அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில், ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சிக்கு (SLT) அண்மையில் நடைபெற்ற “சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருது 2023” இல் “ஏனைய” பிரிவில் உயர்ந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.  33 நிறுவனங்களுடன் SLT போட்டியிட்டு, கடுமையான மதிப்பீட்டு செயன்முறையை தொடர்ந்து இந்த உயர் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முன்னணி வர்த்தக சம்மேளனமான, இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் இந்த வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு துறைகளில் நிலைபேறாண்மைக்கு தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களை கௌரவிக்கின்றது.

SLT-MOBITEL இன் கூட்டாண்மை மூலோபாயத்தில் நிலைபேறாண்மை என்பது எப்போதும் முக்கிய அரணாக அமைந்துள்ளது. இந்த கௌரவிப்பினூடாக, இலங்கையில் நிலைபேறான அபிவிருத்திக்கு SLT-MOBITEL இனால் வழங்கப்படும் பங்களிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் சேவைகளினூடாக, பங்காளர்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான பெறுமதியை ஏற்படுத்தி, பொறுப்பு வாய்ந்த வகையில் வியாபார நடத்தையை கொண்டு, சமூகங்களை மேம்படுத்துவது, ஒழுக்கமான ஆளுகை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல் போன்றவற்றில் SLT-MOBITEL காண்பிக்கும் அர்ப்பணிப்பு இந்த விருதினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) அம்சங்களில் பரிபூரண நிலைபேறான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ள நிறுவனங்களை கொண்டாடும் வகையில் “சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருது” அமைந்துள்ளது.

வர்த்தக சம்மேளனத்தினால், சூழல் வழிநடத்தல், வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக உறவுகள், கூட்டாண்மை ஆளுகை, நிதிச் செயற்பாடுகள், பொருளாதார பங்களிப்புகள் மற்றும் விசேட நிலைபேறாண்மை அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன அடங்கலாக கடுமையான மதிப்பீடுகளுக்கு நிறுவனங்களை உட்படுத்தப்பட்டிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளைக் கொண்ட நடுவர் குழுவினருடன் நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

SLT-MOBITEL இன் சிரேஷ்ட தலைமைத்துவ அணியினரான ஜனக அபேசிங்க (பிரதம நிறைவேற்று அதிகாரி), பிரபாத் தஹநாயக்க (பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி), கலாநிதி. சந்தன விஜயநாம (பிரதம மக்கள் அதிகாரி), அனுருத்த சூரியாரச்சி (பொது முகாமையாளர் – சந்தைப்படுத்தல் சேவைகள்) மற்றும் இதர சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சேவைகள் வழங்குநர் எனும் வகையில் SLT-MOBITEL, தொடர்ந்தும் கூட்டாண்மை நிலைபேறாண்மை தொடர்பில் முன்னேற்றகரமான பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதுடன், அதனூடாக தேசத்துக்கு சுபீட்சமான மற்றும் சூழலுக்கு நட்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் பங்களிப்புச் செய்யும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X