Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL இன் வளர்ந்து வரும் டிஜிட்டல் ஈடுபாட்டு பிரிவான SLT டிஜிட்டல் சேர்விசஸ், தனது புத்தாக்கமான பாடசாலை சமூகமளிப்பு அறிவித்தல் கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) ஆகிய கொள்கைகளுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் பிரகாரம் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வித் துறையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி இந்த அறிமுகம் அமைந்துள்ளது.
இந்த புத்தாக்கமான திட்டத்தின் பிரதான இலக்கு என்பது, மாணவர் வரவை கண்காணித்தல் மற்றும் செம்மையாக்கல், துல்லியத்தன்மையை உறுதி செய்தல், வினைத்திறனுடன், சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது. பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்துகள் போன்ற மாணவர்கள் பயணிக்கும் பல்வேறு பகுதிகளில் அவர்களின் வரவை அடையாளப்படுத்தும் வகையில் இந்தக் கட்டமைப்பு அமைந்துள்ளதுடன், உடனடியாக பெற்றோருக்கு அவர்களின் மொபைல் சாதனங்களினூடாக அறிவிக்கப்படும்.
இந்த நவீன கட்டமைப்பினூடாக சிறுவர்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவது மாத்திரமன்றி, பெற்றோருக்கு உடனுக்குடன் தமது பிள்ளைகளின் பாடசாலை சமூகமளிப்பு அடங்கலான தகவல்களை அறிந்து கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. அங்கிகாரம் பெற்ற நபர்களால் வகுப்பு வரவு தொடர்பான தகவல்களை அணுக முடியும் என்பதால், ஆசிரியர்களாலும் இதனை இலகுவாக உறுதி செய்து கொள்ளலாம். இந்த கட்டமைப்பானது பிரத்தியேகமான உயிரியல் கட்டமைப்பு மற்றும் RFID சாதனங்களினூடாக செயற்படுத்தப்படுகின்றது.
அனுராதபுரம் நிவத்தக சேத்திய தேசிய கல்லூரியில் இந்தத் திட்டத்தின் பரீட்சார்த்த அறிமுகம் நிறுவப்பட்டுள்ளது. தரவு சேகரிப்பு மற்றும் கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற்று, பாடசாலைகளுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கு SLT டிஜிட்டல் சேவைகள் தன்னை அர்ப்பணித்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு மேம்பாட்டில் விசேட கவனம் செலுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
SLT டிஜிட்டல் சேவைகள் பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் மஞ்சநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “மென்பொருள் மற்றும் அப்ளிகேஷன் வடிவமைப்பு பங்காளரான Future Network Holding Private Limited உடன் கைகோர்த்து, தனியார் மற்றும் பொது பாடசாலைகளுக்கு இந்த பிரத்தியேகமான மாணவர் வரவு பதிவு மற்றும் அறிவித்தல் கட்டமைப்பை அறிமுகம் செய்வதற்கு SLT Digital Services முன்வந்திருந்தது. பாடசாலைகளுக்கான இணைய அப்ளிகேஷனை உள்ளடக்கியதாக இந்த சேவை அமைந்திருப்பதுடன், பாடசாலைகளுக்கு எவ்வித செலவுமின்றி வழங்கப்படும். மேலும், பெற்றோருக்கு இந்த சேவையை Android மற்றும் iOS app களினூடாக பெற முடியும். டேட்டா மற்றும் ஹோஸ்டிங் செலவுகளை ஈடு செய்வதற்காக குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றது. பாடசாலைகள் தடங்கலில்லாத மற்றும் தொடர்ச்சியான சேவையை பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் அவசியமான சாதனங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகள் போன்றனவும் வழங்கப்படும்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago