Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 28 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLIIT இன் முதலாவது மெய்நிகர் திறந்த நாள் நிகழ்வு அண்மையில் வெற்றிகரமாக இடம்பெற்றது. கல்வியகத்தில் தமது உயர் கல்வியை தொடர்வதற்கு எதிர்பார்க்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு கல்வியகத்தில் காணப்படும் பரந்தளவு உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
இலங்கையிலும், உலகளாவிய ரீதியில் நிலவும் தொற்றுப் பரவலுடனான உறுதியற்ற நிலை காரணமாக, சகல சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. SLIIT மெய்நிகர் திறந்த நாள் நிகழ்வினூடாக, பங்குபற்றியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், SLIIT இல் காணப்படும் சிறந்த கல்வி வாய்ப்புகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
SLIIT தனது முதலாவது மெய்நிகர் திறந்த நாள் நிகழ்வை இரண்டு அமர்வுகளாக முன்னெடுத்திருந்ததுடன், ஐந்து பீடங்கள் இதில் பங்கேற்றிருந்தன. 108 க்கும் அதிகமான வினாக்களுக்கு இதன் போது பதிலளிக்கப்பட்டிருந்தன.
Zoom, Youtube மற்றும் Facebook ஊடாக இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, பங்கேற்றவர்களுக்கு சிறந்த கல்விக்கான SLIIT இன் அர்ப்பணிப்பு தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. நேரடி அமர்வுகள், ஒன்லைன் கலந்துரையாடல்கள் மற்றும் வினா விடை அமர்வுகள் போன்றன மாணவர்களுக்கு காணப்படும் கல்வி வாய்ப்புகள் தொடர்பான விளக்கும் வகையில் அமைந்திருந்தன.
இந்த திறந்த நாள் நிகழ்வு தொடர்பாக SLIIT இன் அபிவிருத்தி மற்றும் பொறியியல் சேவைகளுக்கான பணிப்பாளர் உதித கமகே கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் தற்போது காணப்படும் கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான சூழ்நிலையில், இந்த ஆண்டு நாம் முன்னெடுத்திருந்த மெய்நிகர் திறந்த நாள் நிகழ்வினூடாக, SLIIT மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகளை பற்றி அவர்களுக்கு அறிந்து கொள்ள முடிந்தது. SLIIT இல் வழங்கப்படும் உயர் மட்ட கற்பித்தல் மற்றும் கற்றல் உதவிச் சேவைகள் தொடர்பிலும், பெருமளவான எதிர்கால வாய்ப்புகள் பற்றியும் அவர்களுக்கு தெரிந்து கொள்ள முடிந்தது.” என்றார்.
பிரத்தியேகமான மற்றும் உதவியுடன் கூடிய பயிலல் சூழலை உறுதி செய்வது, கணனி, வியாபாரம், பொறியியல், கல்வி, விஞ்ஞானம், கட்டடக்கலை, நில அளவையியல், உயிரியல் தொழில்நுட்பம், உளவியல், தாதியியல், சட்டம், விருந்தோம்ல் மற்றும் சமையல் மற்றும் நிகழ்வு முகாமைத்துவம் தொடர்பான கற்றைகள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தது.
எமது புதிய மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த தகவல்களை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் எமது திறந்த நாள் நிகழ்வை மீளக்கட்டமைத்துள்ளோம். SLIIT உடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்கி, தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு அவசியமான புதிய அறிவு மற்றும் திறன்களை வெளிக்கொணர்வதற்கு உதவ நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.” என SLIIT சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி ரொஷானி மதரசிங்க தெரிவித்தார்.
அறிவை பகிர்தல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கு SLIIT தன்னை ஆழமாக அர்ப்பணித்துள்ளது.
இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற கல்வியகமாக SLIIT திகழ்வதுடன், உயர் கல்வி அமைச்சின் அனுமதியையும் பெற்றுள்ளது. SLIIT இனால் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் வியாபார முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டப் பின்படிப்பு கற்கைகள் வழங்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
53 minute ago
4 hours ago