2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

SERRIC உடன் SLT-MOBITEL கைகோர்ப்பு

S.Sekar   / 2022 ஜனவரி 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட தேவைகள் கொண்ட சிறுவர்களுக்கு பண்டிகைக் காலத்தை கொண்டாடுவதற்கு கைகொடுக்கும் வகையில் செனெஹச கல்வி வளங்கள் ஆய்வு மற்றும் தகவல் நிலையத்துடன் (SERRIC), SLT-MOBITEL கைகோர்த்திருந்தது.

படையணியினர் மற்றும் பொலிசாரின் விசேட தேவைகளைக் கொண்ட சிறுவர்களுக்கு கைகொடுத்து ஆதரவளிக்கும் வகையில் செனெஹச நிறுவப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் ரணவிரு சேவா அதிகார அமைப்பின் கீழ் இயங்குகின்றது. இந்த நிலையத்தினூடாக சிறுவர்களுக்கு சிகிச்சை அடிப்படையிலான கல்வி வசதிகள் வழங்கப்படுவதுடன், விசேட தேவைக் கல்வி தொடர்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் முன்னெடுப்பது போன்றவற்றையும் மேற்கொள்கின்றது.

குறிப்பாக விசேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்கள் போன்ற சமூகங்களில் காணப்படும் தேவையுடைய தரப்பினர் மத்தியில், நேர்த்தியான மற்றும் நிலைபேறான மாற்றங்களை முன்னெடுத்து வரும் SLT-MOBITEL, கடந்த நத்தாரை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு SERRIC க்கு ஆதரவளிக்க முன்வந்திருந்தது. விசேட தேவைகளைக் கொண்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நீண்ட கால ஆதரவளிப்பவர் எனும் வகையில், SLT-MOBITEL இன் செயற்பாடுகள் சிறுவர்களுக்கு பயனளிப்பதாக அமைந்திருப்பதுடன், 140 சிறுவர்களுக்கு தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்த கைகொடுத்து உதவுவதாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .