Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 06 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
Play Expo & Colombo Comic Expo 2024 இம்முறையும் Coca-Cola அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Gamer.LK அறிவித்துள்ளது. நாளை (7) மற்றும் நாளை மறுதினம் (8), இலங்கை கண்காட்சி மற்றும் மாநாடுகள் நிலையத்தில் (SLECC) இந்நிகழ்வு முன்னெடுக்கப்படும். புத்தாக்கம் மற்றும் ஆக்கத்திறன் ஆகியவற்றுக்கான நாட்டின் முக்கிய களமாக அமைந்திருக்கும் Play Expo இனால், கேமர்கள், பொப் கலாசார ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைப்பதுடன், திறமைகளினதும் கலாசாரத்தினதும் கொண்டாட்டமாக அமைந்திருக்கும்.
Play Expo 2024 இல் விறுவிறுப்பான Esports போட்டித்தொடரும் உள்ளடங்கியிருக்கும். 20 க்கும் அதிகமான புகழ்பெற்ற தலைப்புகளில் இந்தப் போட்டிகளில் நடைபெறவுள்ளதுடன், இதில் 3000க்கும் அதிகமான கேமர்கள் பங்கேற்பர். போட்டிகரமான கேமிங் மற்றும் சிமியுலேற்றர் ரேசிங் அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும். 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை சைபர் கேம்ஸ் (SLCG) இன் வெற்றியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட Play Expo, தொடர்ந்தும் போட்டிகரத்தன்மையை ஊக்குவிப்பதுடன், இலங்கையின் கேமிங் சமூகத்தில் சிறந்த திறமைசாலிகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தீவிர கேமர்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான அம்சங்களை இந்த நிகழ்வு கொண்டிருக்கும். கேமிங் தொழினுட்பத்தில் பிந்திய அம்சங்கள் மற்றும் கேமிங் சாதனங்கள் போன்றனவும் காட்சிப்படுத்தப்படும்.
Colombo Comic Expo என்பது Play Expo இன் மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த அம்சமாகும். இதில் விறுவிறுப்பான Cosplay Ramp Walk அடங்கியிருக்கும். 200 க்கும் அதிகமான cosplayerகள் பங்கேற்று, தமக்கு விரும்பிய கதாபாத்திரங்களை நிஜவாழ்க்கையில் கொண்டுவருவர். நாட்டில் முன்னெடுக்கப்படும் மாபெரும் cosplay கொண்டாட்டமாக அமைந்திருப்பதுடன், Play Expo இனால் ஆக்கத்திறன், வடிவமைப்பு மற்றும் சுய வெளிப்படுத்தல் போன்றவற்றுக்கு களம் வழங்கி, பொப் கலாசார ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாகவும் அமைந்திருக்கும்.
இலங்கையின் சுயாதீன கலைஞர்கள் மற்றும் அவர்களின் ஆக்கங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம். டிஜிட்டல் கலை, கமிக்ஸ் மற்றும் ரசிகர்களை கவரும் மேர்ச்சன்டைஸ் தெரிவுகள் போன்றன இதில் அடங்கியிருக்கும். உள்நாட்டு திறமைசாலிகளின் ஆக்கங்களை வெளிப்படுத்தும் இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு இந்த தயாரிப்பாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, இந்த கலையம்சங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
ரசிகர்களுக்கு தமக்கு விருப்பமான influencers, vloggers மற்றும் streamers களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். புகழ்பெற்ற நபர்கள் உள்ளக தகவல்களை பகிர்வதுடன், விருந்தினர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு, இலங்கையின் விறுவிறுப்பான ஒன்லைன் சமூகத்தின் கொண்டாட்டத்துக்கு வலுச்சேர்ப்பார்கள்.
Gamer.LK இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவீன் விஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் Play Expo என்பது, இலங்கையின் இளைஞர் கலாசாரம், ஆக்கத்திறன் மற்றும் டிஜிட்டல் களிப்பூட்டும் அம்சங்கள் போன்றவற்றின் பெருமளவு வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஈடுபாடு, புத்தாக்கம் மற்றும் சுய-வெளிப்பாடு ஆகியவற்றை பிரத்தியேகமான முறையில் கட்டியெழுப்பி, பரந்தளவு சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு களமாக இந்நிகழ்வு வளர்ச்சியடைந்துள்ளதை காண்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.
கேமிங் மற்றும் தொழினுட்பத்தில் பிந்திய அறிமுகங்களை விருந்தினர்கள் அனுபவிக்க முடியும். கண்காட்சியில் சக்தி வாய்ந்த gaming rigs, VR அனுபவங்கள் மற்றும் புத்தாக்கமான சாதனங்கள் போன்றன தொழினுட்பத்தையும் சிந்தனையையும் ஒன்றிணைத்து வெளிப்படுத்தும். முன்னணி தொழினுட்ப மற்றும் வாழ்க்கை முறை வர்த்தக நாமங்கள் பிரத்தியேகமான சலுகைகள் மற்றும் நேரடி செயற்படுத்தல் விளக்கங்கள் போன்றன நிகழ்வில் காண்பிக்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
22 minute ago
45 minute ago