Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈ பி கிறீஸி குரூப்பின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமும், கம்பிகள் உற்பத்தியில் ஈடுபடும் லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (Lanka SSL), தனது கம்பித் தெரிவுகளை மேலும் விஸ்தரிக்கும் வகையில், ‘Permaweld’ வர்த்தக நாம வெல்டிங் electrode தயாரிப்புகளை சகல விதமான வெல்டிங் தேவைகளுக்காகவும் அறிமுகம் செய்துள்ளது.
‘Permaweld’ வர்த்தக நாம வெல்டிங் electrode தெரிவுகள், 70 வருடங்களுக்கு மேலாக நாட்டில் ஒளியூட்டல் வியாபாரத்தில் நன்மதிப்பைப் பெற்றுத் திகழும் மற்றுமொரு துணை நிறுவனமான லக்சபான பற்றரிஸ் பிஎல்சியின் ஹார்ட்வெயார் பிரிவினூடாக நாடு முழுவதிலும் விநியோகிக்கப்படும்.
லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரவீன் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “புதிய ‘Permaweld’ வர்த்தக நாம வெல்டிங் electrode தயாரிப்புகளை நாம் இலங்கை சந்தையில் அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது இந்தப் பயணத்தில் ஏக விநியோகத்தராக, நன்மதிப்பை வென்ற நாமமான லக்சபான பற்றரிஸ் பிஎல்சி எமது ஏக விநியோகத்தராக கைகோர்த்துள்ளது. இந்த உறவை எதிர்காலத்தில் மேலும் கட்டியெழுப்புவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
லக்சபான ஹார்ட்வெயார் விநியோக முகாமையாளர் துசித குருப்பு கருத்துத் தெரிவிக்கையில், “புதிய Permaweld’ வர்த்தக நாம வெல்டிங் electrode தயாரிப்புகள் சந்தையில் அதிகளவு வரவேற்பைப் பெறும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாடு முழுவதையும் சேர்ந்த வெல்டிங் வேலைகளில் ஈடுபடுவோர் மத்தியில் இந்த தயாரிப்புக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளது. லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஏனைய தயாரிப்புகளுடன் இந்த புதிய தயாரிப்பும் எமது விநியோக செயற்பாடுகளுக்கு பெறுமதி சேர்ப்பதாக அமைந்துள்ளது.” என்றார்.
LED ஒளியூட்டல் தீர்வுகள் வழங்குநராக லக்சபான பற்றரிஸ் பிஎல்சி திகழ்வதுடன், 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து தொழிற்துறையில் LED தொழில்நுட்பத்தை பிரயோகிப்பதில் முன்னோடியாக திகழ்ந்துள்ளது. இதன் தயாரிப்புகள் உயர் தரம், தங்கியிருக்கும் திறன் மற்றும் உறுதியான வினைத்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், உயர் வலு வினைத்திறன் வாய்ந்தாகவும், நீடித்து உழைக்கும் மற்றும் பரந்தளவு ஒளி மூலங்களை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.
1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட், பல்வேறு தொழிற்துறைகளில் நம்பிக்கையை வென்ற கம்பிகளின் விநியோகத்தராக புகழ்பெற்றுள்ளது. குறிப்பாக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இலங்கையின் நிர்மாணத்துறையில் அதிகளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் உயர் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் போன்றவற்றுக்கு அதன் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் இந்தத் தயாரிப்புகளை தெரிவு செய்கின்றமை சிறந்த சான்றாக அமைந்துள்ளது. நிறுவனத்தின் தகைமை வாய்ந்த அனுபவம் மிக்க அணியினரால் உயர் பிரத்தியேகமான தீர்வுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது ISO 9001: 2015 மற்றும் SLS 139: 2003 சான்றிதழ்களைப் பெற்ற நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Lanka SSL மிக சமீபத்தில் TATA Steel Ltd நிறுவனத்தின் Global Wire India (GWI) உடனான நீண்டகால பங்குடைமையை வலுப்படுத்தியுள்ளது. அதன் அனைத்து கம்பி தயாரிப்புகளுக்கும் ஒரே முகவர் மற்றும் விநியோகத்தராக திகழ்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
42 minute ago
52 minute ago
1 hours ago