2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

One Galle face mallஇல் 5G அனுபவங்களை SLT-MOBITEL பகிர்வு

S.Sekar   / 2022 செப்டெம்பர் 09 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, கொழும்பு one Galle-face Mall கிளையில் வாடிக்கையாளர்களுக்கு 5G அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் பொது மக்களுக்காக பரந்தளவு 5G தொழில்நுட்ப வெளிப்படுத்தல் சேவைகள், Virtual Reality, 5G Gaming, remote vehicle control, HD video streaming போன்ற பல அம்சங்கள் அடங்கியிருந்தன. இவற்றினூடாக, அதியுயர் வேகங்களுக்கு மேலதிகமாக 5G தொழில்நுட்பத்தின் திறன்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிரதான நகரங்களில் தினசரி வாழ்க்கையில் 5G ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ள நிலையில், தனது வணிக அறிமுகத்துக்கு முன்னரான பரீட்சார்த்த வலையமைப்பு பகுதிகளை கொழும்பு, கண்டி, அனுராதபுரம், காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதான நகரங்களில் SLT-MOBITEL மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. இதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு 5G தொழில்நுட்பத்தை மொபைல் புரோட்பான்ட் ஊடாகவும், நிலையான வயர்லஸ் அணுகல் டொமெயின்களினூடாகவும் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல், SLT-MOBITEL இனால் நாடு முழுவதிலும் 5G வலையமைப்பு பற்றிய விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. 2019 ஏப்ரல் மாதத்தில் SLT-MOBITEL இனால், தெற்காசியாவின் முதலாவது மொபைல் வலையமைப்பினூடான 5G பரீட்சார்த்த நிறுவுகை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. மொபைல் ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றை 5G வலையமைப்புடன் இணைத்து அதிவேக இணைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. வயர்லஸ் தொடர்பாடலின் அடுத்த தலைமுறையாக 5G அறியப்படுகின்றது. இதில் அதிவேகம், பாரிய இணைப்புத்திறன் மற்றும் புதிய உள்ளடக்கமான அனுபவங்கள் போன்றவற்றுடன் HD video streaming, virtual reality, factory automation, remote operations, mission-critical communications, massive IOT, smart home & smart city கொள்கைகள் மற்றும் விறுவிறுப்பான மேலும் பல வரையறைகளற்ற அம்சங்கள் நுகர்வோர்களுக்காகவும், வியாபாரங்களுக்காகவும் அடங்கியுள்ளன.

இலங்கையில் வணிக ரீதியிலான 5G வலையமைப்பு அனுமதியை வழங்கும் பணிகளை இலங்கை தொலைத்தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், அவசியமான அனுமதியை SLT-MOBITEL பெற்றுக் கொண்டதும், தனது 5G வலையமைப்பை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகளை முன்னெடுக்கும். அதனூடாக, டிஜிட்டல் மேம்படுத்தல்களினூடாக, உள்ளடக்கமான டிஜிட்டல் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X