2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ODEL Mall Kandy ஆரம்பம்

S.Sekar   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சி தனது ‘ODEL Mall Kandy’ ஐ திறந்துள்ளது. விசாலமான 91,414 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட ODEL Mall, இலங்கை மலைநாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கண்டியின் மிகவும் விரும்பப்படும் அதிநவீன, உயர்தர வாழ்க்கை முறை ஷொப்பிங் இடமாக மாறத் தலைப்பட்டுள்ளது.

இலக்கம் 377, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, பேராதனை வீதி, கண்டி என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த ODEL Mall, சொஃப்ட்லொஜிக் இன் மிகவும் பிரபலமான வர்த்தக நாமங்களான ODEL (உலகப் புகழ்பெற்ற சர்வதேச மற்றும் உள்ளூர் இலச்சினைகளின் தயாரிப்பு வரிசையைக் கொண்டுள்ள இலங்கையின் முதன்மையான நவநாகரிகம் மற்றும் வாழ்க்கை முறை சில்லறை விற்பனையாளர்) அடங்கலாக மிகவும் போற்றப்படுகின்ற வர்த்தகநாமங்களைக் கொண்டிருக்கும். அத்துடன், Baskin Robbins (உலகில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் உலகின் மிகப்பெரிய விசேடமான ஐஸ்கிரீம் சங்கிலி), GLOMARK (நாட்டின் நவீன சில்லறை வர்த்தகத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் முதல் உத்வேகமளிக்கும் உலகளாவிய சந்தை) மற்றும் POPEYES (அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி துரித உணவுச் சங்கிலி) ஆகியனவும் இங்கு இடம்பெறவுள்ளன.

இந்த சில்லறை வணிக வளாகமானது, கண்டியில் முதன்முறையாக, GLOMARK மற்றும் POPEYES என வேகமாகப் பிரபலமடைந்து வருகின்ற இரண்டு வர்த்தகநாமங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. GLOMARK பல்பொருள் அங்காடியானது உங்கள் வீட்டிற்குத் தேவையான உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் பெறப்படுகின்ற பரந்த அளவிலான அத்தியாவசியப் பொருட்களையும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான ஷொப்பிங் அனுபவத்தையும் கொண்டிருக்கும். இந்த பல்பொருள் அங்காடி அதன் தனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தின் நீட்டிக்கப்பட்ட வடிவமாக Bakes உடன் ஒரு கஃபே அனுபவத்தையும் வழங்குகிறது. POPEYES அன் தனித்துவமான, மென் சமையல் முறை கலைக்காக பெயர்பெற்று விளங்குகின்றது. அங்கு புத்தம்புதிய, உள்நாட்டில் பெறப்பட்ட கோழி இறைச்சியானது அதன் தனியுரிமம் கொண்ட சுவையூட்டிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையுடன் 12 மணி நேரம் ஊற வைக்கப்படுகிறது, அதன் பிறகு கையால் அடித்து, பிரட் செய்து, ஒரு வெளியே ஒரு மொருமொருப்பான மேலோட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளே சாறு வடிவம் கொண்டதாக இருக்கும். அமெரிக்காவின் லூசியானாவில் தனது ஆணிவேர்களைக் கொண்டுள்ள இது, வாடிக்கையாளர்களின் சுவை மொட்டுகளை முழுமையாக நலச்செழுமை பெறச் செய்கின்றது.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் பணிப்பாளர் சபைத் தலைவரான அசோக் பத்திரகே குறிப்பிடுகையில், “ODEL Mall Kandy ஐ ஆரம்பித்து வைப்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் கண்டி மக்களுக்கு எங்களின் மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமங்கள் பலவற்றை ஒன்றிணைத்து ஒரு ஈடுஇணையற்ற ஷொப்பிங் மற்றும் உணவு விருந்து அனுபவத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். இந்த சிறந்த புதிய அமைவிடத்தின் சிறப்பான அனுகூலம் எமக்கு மிகவும் ஊக்கமளிப்பதுடன், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்வில் அதிக அணுகலையும் சௌகரியத்தையும் கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .