Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
Northshore International Campus, கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, தனது செயற்பாடுகளை மாற்றியமைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அண்மையில் முன்னெடுத்திருந்ததன் ஊடாக, உண்மையான தனது ஈடுபாட்டைத் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி சார் துறைக்குத் தெரியப்படுத்துகிறது.
பொறியியல், வணிகம், கணினி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உயர் தரப்படுத்தலைக் கொண்ட பல்கலைக்கழங்களிடமிருந்து சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரித்தானிய பட்டப்படிப்புகளை Northshore வழங்குகின்றது.
அத்துடன், நாட்டில் முடக்க நிலை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாரத்திலிருந்து ஒன்லைன் ஊடாக விரிவுரைகள் முன்னெடுப்பதை அறிமுகம் செய்ததற்கமைய இலங்கையின் முன்னணி உயர் கல்விச் சேவைகளை வழங்கும் கல்வியங்களில் ஒன்றாகவும் அமைந்திருந்தது. மேலும், இலங்கையில் ஒன்லைன் ஊடாகப் பரீட்சைகளை நடத்தி முடித்துள்ள முதலாவது உயர் கல்வியகமாகவும் Northshore தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.
Northshore கல்விசார் ஊழியர்களும் முறையான திட்டமிடல், கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல்களினூடாக, ‘Teaching at a Distance’ முறையைப் பின்பற்றியிருந்தனர். இதன் போது, மாணவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றுக் கொள்வது, விசேடமாக அமைக்கப்பட்ட chat group களினூடாக மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் தொடர்புகளைப் பேண முடிந்தது.
ஐக்கிய இராட்சியத்தைச் சேர்ந்த தமது பங்காண்மைப் பல்கலைக்கழகங்களிடமிருந்து ஒன்லைன் ஊடாகக் கற்பித்தல் வளங்களைப் பெற்றுக் கொள்வதோடு மட்டுமன்றி, Northshore தனது மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கக்கூடிய Digital நூலகத்திலிருந்து, மாணவர்களுக்கு அவசியமான கற்றல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago