Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 13 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஆடைகள் உற்பத்தித் துறையில் முன்னோடியான நாமமாகவும், தனது சகல செயன்முறைகளிலும் காபன் நடுநிலை சான்றிதழைப் பெற்றுள்ள ஒரே குழும நிறுவனமுமாக திகழும் Star Garments Group (“Star”), 32 ஆவது NCE ஏற்றுமதி விருதுகள் வைபவத்தில் ஆடைகள் மற்றும் ஆடை உற்பத்தி பிரிவில் மிகப் பெரிய பிரிவில் தங்க விருதை சுவீகரித்தது.
இலங்கை தேசிய ஏற்றுமதியான சம்மேளனத்தினால் (NCE) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, இம்முறை ‘embrace innovation and digitalization’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக எழுந்திருந்த பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த கௌரவிப்பு Star க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலிலும், புதிய கையகப்படுத்தல்கள் மற்றும் குழுமத்தின் பன்னிரண்டாவது தொழிற்சாலையாக Kolonna Manufacturing (Pvt) Limited ஐ உள்வாங்கியிருந்தமை போன்றன அடங்கலாக, இலங்கையில் Star தனது பிரசன்னத்தை தொடர்ச்சியாக மேம்படுத்தியிருந்தது.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுக்கு ஆடை ஏற்றுமதிகளை Star மேற்கொள்வதுடன், ஒழுக்கமான, உயர் தரம் வாய்ந்த ஆடை உற்பத்திக்கான முதல்தர தெரிவாக இலங்கையை ஊக்குவித்த வண்ணமுள்ளது. நிறுவனத்தின் உறுதியான ஏற்றுமதி வினைத்திறனினூடாக, இலங்கையின் வருடாந்த ஆடை ஏற்றுமதி வருமானங்கள் அதிகரிப்பதுடன், 2023 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது. இதனூடாக, உயர் ஏற்றுமதி அளவை பேணுவதுடன், உயர்தரம் வாய்ந்த சர்வதேச விற்பனையாளர்களுடன் பெறுமதி வாய்ந்த பங்காண்மைகளை பேணிய வண்ணமுள்ளது.
இன்று, Star தன்வசம் 10,000 க்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளதுடன், இலங்கையில் 12 தொழிற்சாலைகளையும் இயக்குகின்றது. மாதாந்தம் 1.6 மில்லியன் ஆடைகளை தயாரிக்கும் கொள்ளளவு திறனை கொண்டுள்ளது. IFC நிதியளிப்பு வசதியின் கீழ், மேற்கு ஆபிரிக்காவின் Togo பிராந்தியத்தில் பாரியளவிலான ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையை நிறுவும் திட்டம் நிலவுவதாக குழுமம் அறிவித்திருந்தது.
சூரிய வலுக் கட்டமைப்புகள் மற்றும் கழிவிலிருந்து வலு தொழினுட்பங்களை பின்பற்றுவதனூடாக புதுப்பிக்கத்தக்க வலுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, காபன் நடுநிலையை Star எய்தியுள்ளது. கட்டுநாயக்கவிலுள்ள Star புத்தாக்க நிலையமானது, இலங்கையின் முதலாவது LEED Platinum கட்டிடமாகும். இதற்கு பிந்திய LEED version 4 சான்றளிப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய பிராந்தியத்தின் முதலாவது ‘Passive House Design’ ஆகவும் கருதப்படுகின்றது. நிலைபேறான ஆடைகள் ஏற்றுமதியில் சர்வதேச முன்னோடியாக திகழும் இலங்கையின் நோக்கத்துடன் பொருந்தும் வகையில் இந்த முயற்சிகள் அமைந்துள்ளன.
Star இன் நவீன ஆடை தொழினுட்பங்களினூடாக, நவீன நுகர்வோர் கேள்விகள் பல நிவர்த்திக்கப்படுவதுடன், சூழலுக்கு நட்பான ஆடைகள், ஆடை கழிவு விரயத்தை தணித்தல் மற்றும் அபிவிருத்தி சுழற்சியை 30 சதவீதத்துக்கு அதிகமாக குறைத்தல், துறையில் புத்தாக்கத்தை முன்னெடுத்தல் போன்றன அடங்கலான விடயங்களில் கவனம் செலுத்தப்படுகின்றது. R&D இல் கைகோர்ப்புகளினூடாக, உயிரியல் ரீதியில் உக்கும் ஆடைத் தெரிவுகளுடன், சூழலுக்கு நட்பான சாய பொறிமுறைகளை பின்பற்றுகின்றது. இவற்றினூடாக நிலைபேறான நவநாகரீகத்தில் முன்னோடி எனும் நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன், R&D அடிப்படையிலான உற்பத்தியில் சர்வதேச மட்டத்தில் போட்டிகரத்தன்மையை ஏற்படுத்துவதில் பங்களிப்பு வழங்குகின்றது.
உலகத் தரம் வாய்ந்த வர்த்தக நாமங்களுக்கு சேவைகளை வழங்கும் Komar கம்பனியின் துணை நிறுவனமாக அமைந்துள்ள Star, இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள், பிராந்தியத்தின் ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் உயர் பெறுமதிகளை ஏற்படுத்துவதை பேணுவதை உறுதி செய்கின்றது. நாடு முழுவதிலும் Star இனால் முன்னெடுக்கப்படும் சமூக செயற்பாடுகளில், கண்டல் தாவர மறுசீரமைப்பு மற்றும் பல்வேறு சமூக மட்ட நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல் போன்றன அடங்கியுள்ளன. இலங்கையின் உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்கு சிறந்த ஸ்தாபனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக Great Place to Work இனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும், சர்வதேச ரீதியிலும் Star தொடர்ந்தும் வியாபித்து விரிவாக்கமடைய எதிர்பார்ப்பதுடன், நாட்டின் ஆடை உற்பத்தித் துறையின் பிரதான அரணாக திகழவும் எதிர்பார்க்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago