Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெஸ்லே நிறுவனத்தின் மைலோ அண்மையில் முன்னெடுத்திருந்த ‘Milo Moments’ பிரச்சாரத்தின் ஊடாக, 2022 ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு வாரந்தோறும் 1000 வெற்றியாளர்களுக்கு வெகுமதி வழங்கப்படவுள்ளது. மடிகணினிகள், டெப் சாதனங்கள், ரீலோடுகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், ஸ்கேட்போர்டுகள், கூடைப்பந்துகள், உதைப்பந்துகள், ஸ்கிப்பிங் ரோப்ஸ் (துள்ளல் கயிறு), சப்பாத்துகள் மற்றும் டிராம்போலின்கள் போன்ற விளையாட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் இதில் அடங்கியுள்ளன. நெஸ்லே மைலோ தனது வாடிக்கையாளர்களை அவர்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேற உதவும் ஒரு வர்த்தகநாமமாக இருப்பதால், தொற்றுநோயின் சவால்களுக்கு மத்தியில் சிறுவர்கள் சுறுசுறுப்பாக இருக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்தப் பிரச்சாரத்தை நடத்துகிறது.
'தொற்றுநோய் பரவ ஆரம்பித்திருந்த சமயத்தில், வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் அணியாக முன்னெடுக்கும் செயல்பாடுகள் தடைப்பட்டன. ஆகையால் சிறுவர்கள் தமது வீடுகளுக்குள் முடங்க வேண்டி ஏற்பட்டது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு விளையாட்டு மற்றும் உடல்ரீதியான செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை எப்போதும் நம்பும் ஒரு வர்த்தகநாமமாக, இந்த சவாலான காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க ஏராளமான செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பதை சிறுவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். எனவே, நாடு முழுவதிலுமுள்ள 12,000 சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலமாக அவர்களை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிப்பதுடன், அவர்களின் கல்வித் தேவைகளுக்கும் ஆதரவளிக்க முடியும்,' என்று நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பு வகை சந்தைப்படுத்தல் முகாமையாளரான மொஹமட் அலி கூறினார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சுடன் இணைந்து ‘Milo Moments’ பிரச்சாரத்தின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சரான எச்.எம் பியல் நிசாந்த த சில்வா இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன், இது தொடர்பில் கூறுகையில், 'ஆரோக்கியமான தலைமுறையை வளர்ப்பதற்கு உதவுவதற்காக நெஸ்லே மைலோ போன்ற வர்த்தகநாமத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இம்முயற்சியின் மூலம் வழங்கப்படும் உபகரணங்கள், சிறுவர்களை உடல் ரீதியாக சுறுசுறுப்பாகச் செயல்பட ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் விளையாட்டுத் திறன் மற்றும் திறமைகளை வளர்க்கவும் உதவும்,' என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .