Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 ஏப்ரல் 02 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பண அனுப்பல் சேவைகளை வழங்கும் MMBL Money Master, இப் பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் வகையில் “முதல் நிதானய” (பணப் புதையல்) ஊக்குவிப்புத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பணப் பரிசுகளை வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியாக பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளது.
MMBL Money Master இன் பணப்பரிமாற்ற சேவைகளான Western Union, MoneyGram அல்லது Ria ஊடாக இரு தடவைகள் அல்லது அதற்கு அதிகமான தடவைகள் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டசாலி தெரிவுக்கான தகைமையைப் பெறுவார்கள் என்பதுடன், பணப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள். 2021 ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும்.
MMBL Money Transfer (Pvt) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளரும், எயிட்கன் ஸ்பென்ஸ் குரூப் பிஎல்சியின் பணிப்பாளருமான தினேஷ் மென்டிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் மாபெரும் பணப்பரிமாற்ற சேவை பிரதிநிதி எனும் வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற திட்டங்களினூடாக எப்போதும் வெகுமதிகளை வழங்கியுள்ளோம். பெருமளவான வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களாக திகழ்வதுடன், அவர்களின் அன்புக்குரியவர்கள் இலங்கையில் வசிக்கின்றனர். எனவே, இந்தத் திட்டத்தினூடாக, கடுமையாக உழைக்கும் இலங்கையர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்புகளுக்காகவும், அவர்களின் அன்புக்குரியவர்களுக்காகவும் வெகுமதியளிக்கப்படுகின்றது.” என்றார்.
MMBL Money Master என்பது நாடு முழுவதிலும் 2000க்கும் அதிகமான உப பிரதிநிதிகள் பகுதிகளினூடாக பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. இந்த ஊக்குவிப்புத் திட்டத்துக்கு, வாடிக்கையாளர்கள் தமது பண அனுப்புகைகளை அங்கீகாரம் பெற்ற MMBL பணப் பரிமாற்ற சேவை வழங்கும் உப பிரதிநிதிகள், தெடிகம அடகுசேவை நிலையங்கள், DFCC வங்கிக் கிளைகள், SDB வங்கிக் கிளைகள், அமானா வங்கிக் கிளைகள், MPCS கிராமிய வங்கிகள் மற்றும் சணச சங்கங்கள் போன்றவற்றினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.
எயிட்கன் ஸ்பென்ஸ் குரூப் மற்றும் மேர்கன்டைல் மேர்ச்சன்ட் வங்கி ஆகியவற்றுக்கிடையிலான இணை நிறுவனமாக MMBL பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கும் நிறுவனம் திகழ்கின்றது. சேவை, தங்கியிருக்கும் திறன் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறை போன்றவற்றுக்காக நற்பெயரைப் பெற்றுள்ளது. 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட MMBL Money Master, வெஸ்டர்ன் யூனியன் சேவைகளை வழங்கும் பழைய மற்றும் முன்னணி சேவை வழங்குநராக திகழ்வதுடன் உலகப் புகழ்பெற்ற பணப்பரிமாற்ற சேவைகளான MoneyGram மற்றும் Ria ஆகியவற்றின் பிரதிநிதியாகவும் திகழ்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago