Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 டிசெம்பர் 17 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமதி ஹோல்டிங்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான LOKX Security Services (Pvt) Ltd இனால் நாடு முழுவதையும் சேர்ந்த வணிக மற்றும் தொழிற்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும், வதிவிடங்கள் மற்றும் பணம் கொண்டு செல்கையில் அவசியமான பரிபூரண பாதுகாப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட நிறுவனம் எனும் வகையில், 1987 ஆம் ஆண்டு, சுமதி ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பரந்த இலாகா பிரிவுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் Vice Squad Security Services ஆக LOKX Security Services நிறுவப்பட்டது. பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுகு்கு உயர் தரம் வாய்ந்த சேவைகளை அதிகளவு அலுவலக இடவசதிகளுடன் பெற்றுக் கொடுக்கும் வகையில், அண்மையில் நிறுவனம் தனது செயற்பாடுகளை இல. 17, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10 எனும் முகவரிக்கு தனது செயற்பாடுகளை மாற்றியமைத்திருந்தது. நகரின் மையப்பகுதியில் இந்த புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளதுடன், இலகுவாக அணுகக்கூடியதாகவும், அவசியமான கண்காணிப்பு சேவைகளையும் வழங்குகின்றது. வியாபாரங்களுக்கு தமது விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் வகையில் இந்த அமைவிடம் காணப்படுவதுடன், இதற்காக பெருமளவு ஊழியர்களையும் தன்வசம் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்கின்றது.
சுமதி ஹோல்டிங்ஸ் குழுமத்தின் வலுவூட்டலில், பரிபூரண பாதுகாப்பு தீர்வுகளை வழங்கி, பொது மக்களையும் வியாபாரங்களையும் பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்வதுடன், LOKX Security Services இனால் உடனுக்குடனான, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய மற்றும் தங்கியிருக்கக்கூடிய பாதுகாப்பு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு உயர் நியமத் தரம் மற்றும் நிபுணத்துவத்தை பேணும் வகையில் அமைந்துள்ளது. நன்மதிப்பு வாய்ந்த வகையிலும், நட்பான ரீதியிலும் சம்பந்தப்பட்ட நபர்களின் பிரத்தியேகத் தன்மையை பாதுகாத்து சேவைகள் வழங்கப்படுவதுடன், அதிகளவு உணர்திறன் பேணப்படுகின்றது. 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல், கடந்த தசாப்த காலங்களில் நிறுவனம் நேர்த்தியான மாற்றத்தை எதிர்கொண்டிருந்ததுடன், அதன் சேவைகளை வினைத்திறன் வாய்ந்த வகையில் வழங்குகின்றது. 1500 முறையாக பயிற்சிகளைப் பெற்ற பாதுகாப்பு நபர்களுடன் நிறுவனம் காணப்படுவதுடன், இதில் ஓய்வுபெற்ற மற்றும் முன்னாள் படை அதிகாரிகள் அடங்கியுள்ளனர். இவர்களின் நேர்மை, வெளிப்படைத்தன்மை, உண்மைத் தன்மை மற்றும் நடத்தை போன்றவற்றை முறையாக ஆராய்ந்து பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பை வழங்கும் வகையில் அணியில் அனுபவம் வாய்ந்த நபர்கள் பலர் காணப்படுவதுடன், தமது கடமைகளை வினைத்திறன் வாய்ந்த வகையில் முன்னெடுக்கின்றனர்.
பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால, பரஸ்பர வெகுமதியளிக்கும் உறவுகளை கட்டியெழுப்புவதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், LOKX Security Services இனால், தங்கியிருக்கக்கூடிய மற்றும் நம்பிக்கை வாய்ந்த சேவைகள் பிரதான பெறுமதிகளாக வழங்கப்படுகின்றன. ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச விநியோகத்தர்களிடமிருந்து நவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுவதுடன், அவசியமான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட புத்தாக்கமான மற்றும் தங்கியிருக்கக்கூடிய வழிமுறைகள் வழங்கப்பட்டு, நாடு முழுவதிலும் சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றை மேற்கொள்ளும் பயிற்சிகளைப் பெற்ற பாதுகாப்பு அதிகாரிகள், நிறுவனத்தின் பெறுமதி வாய்ந்த சொத்துக்களாக அமைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago