2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

LIFESERV இன் “பாதுகாப்பாக இருந்து, பாதுகாப்பான சேவைகளை பெறுங்கள்”

S.Sekar   / 2021 நவம்பர் 15 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

LifeServ’ (Private) Limited, தொற்றுப் பரவும் காலப்பகுதியில் “பாதுகாப்பாக இருந்து, பாதுகாப்பான சேவைகளை பெறுங்கள்!” எனும் கொள்கையை ஊக்குவிப்பதற்கு முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், நாட்டில் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்தத் தொற்றுப் பரவும் காலப்பகுதியில் இலங்கையர்களுக்கு கைகொடுக்கும் LifeServ, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற, உயர் தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பு தயாரிப்புகளை மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை சாதனங்கள், இனங்காணல் சாதனங்கள், சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ சாதனங்கள் மற்றும் தயாரிப்புகள் போன்றவற்றை விரிவாக்கம் செய்வதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளதாக அறிவித்துள்ளது.

டிஜிட்டல் குருதி அழுத்த கண்காணிப்பான்கள், குருதி குளுகோசு கண்காணிப்பான்கள், சர்க்கர நாற்காலிகள் போன்ற வீட்டுப் பாவனை மருத்துவ சாதனங்களில் உள்நாட்டு சந்தையில் LifeServ (Pvt) Ltd கவனம் செலுத்துகின்றது. தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு இவை மிகவும் அத்தியாவசியமான சாதனங்களாக அமைந்துள்ளன. தற்போதைய தொற்றுப் பரவும் சூழலில் இந்த சாதனங்களின் தேவை என்பது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. பல நபர்களுக்கு வைத்தியசாலைகளுக்கு அல்லது கிளினிக்களுக்கு செல்ல வேண்டிய தேவையை இல்லாமல் செய்வதுடன், வீடுகளிலிருந்தவாறே அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

தந்திரோபாயம் மற்றும் வியாபார அபிவிருத்திக்கான பணிப்பாளர் சத்துல சுமதிபால கருத்துத் தெரிவிக்கையில், “முன்னரை விட தற்போது, உங்கள் வீடுகளில் அத்தியாவசிய அடிப்படை சுகாதார பராமரிப்பு கண்காணிப்பு தயாரிப்புகளை கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும். கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில், பாதுகாப்பு மற்றும் முற்காப்பு நடவடிக்கைகள் போன்றன அத்தியாவசியமானவையாகும். வீடுகளில் அவசியமான மருத்துவ பராமரிப்பு சாதனங்கள் காணப்படுமிடத்து, வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் போன்றன மேலும் வலுவூட்டப்படும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஏனையவர்கள் தமது பொது சுகாதார நிலையை தினசரி அடிப்படையில் பரிசோதித்துக் கொள்வது முக்கியமானது என்பதுடன், அதனூடாக எதிர்பாராத சுகாதார பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும். சுய கண்காணிப்பு சாதனங்களின் பாவனை என்பது ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் அனுகூலமளிப்பதாக அமைந்துள்ளன. சுமதி ஹோல்டிங்ஸ் ஊடாக LifeServ நிறுவனம், சமூகத்துக்கு ஆதரவளிக்க தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், தொற்றுப் பரவலை தவிர்த்து நலனை பேணுவதற்கு உதவவும் முன்வந்துள்ளது.” என்றார்.

நிலைபேறான, தொடர்ச்சியான நியமங்கள் மற்றும் சேவை ஊடாக, LifeServ இனால் நோயாளர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு நிபுணர்களுடன் நெருக்கமான உறவுமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இதனூடாக சந்தையின் தேவைகள் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள உதவியுள்ளது. தற்போதைய தரம், உற்பத்தித்திறன் மற்றும் சேவை ஆகியவற்றின் மட்டங்களை விஞ்சுவதற்கும், புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்வதற்கும் இந்த புரிந்துணர்வு கைகொடுத்துள்ளது. தயாரிப்பு வழங்குநர் என்பதற்கு அப்பால் இனங்காணப்பட்டுள்ள LifeServ’ (Pvt) Ltd, சுமதி ஹோல்டிங்ஸ் உடன் இணைந்து, சுகாதார விதிமுறைகள் மற்றும் நிர்வாகம் போன்றவற்றில் தமது அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நீடித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .