2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

International Organization for Migration (IOM) ஸ்ரீ லங்கா உடன் eChannelling கைகோர்ப்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL இன் துணை நிறுவனமான eChannelling, ஐக்கிய இராஜ்ஜியம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கான புலம்பெயர்வுகளுக்கு அவசியமான சுகாதார மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்கான இலவச ஒன்லைன் முற்பதிவுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக International Organization for Migration (IOM) ஸ்ரீ லங்கா உடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

புலம்பெயர்வோர் மற்றும் பயணங்களை மேற்கொள்வோருக்கு அவசியமான, பயனளிக்கும் பரிபூரண சுகாதார மதிப்பாய்வுகளை IOM வழங்குகின்றது. இந்த புதிய பங்காண்மையினூடாக, புலம்பெயர்வோருக்கு தமது IOM சுகாதார மதிப்பாய்வு முற்பதிவுகளை ஒன்லைனில் eChannelling இன் இணையத்தளத்தினூடாக அல்லது eChannelling மொபைல் app ஊடாக மேற்கொள்ள முடியும்.

 

eChannelling மற்றும் IOM இடையிலான கைகோர்ப்பினூடாக, இடையீட்டாளர்களின் தலையீடின்றி புலம்பெயர்வதற்கு எதிர்பார்ப்போருக்கு தமது மருத்துவ பரிசோதனை முற்பதிவுகளை இலவசமாக முற்பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட செயன்முறையினூடாக புலம்பெயர்வோருக்கு தமது பிரயாணத்துக்கு முன்பாக சுகாதார பரிசோதனை சேவைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் வழங்கப்படுகின்றன.

IOM இன் புலம்பெயர் சுகாதார பிரிவினூடாக, இலங்கையில் 2014 ஆம் ஆண்டு முதல் விசேடத்துவமான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த ஊழியர்களினூடாக, உயர் தரம் வாய்ந்த சேவைகள் நிபுணத்துவமான முறையிலும், வினைத்திறனான முறையிலும் வழங்கப்படுகின்றன. eChannelling உடன், விண்ணப்பதாரிகளுக்கு இலவச ஒன்லைன் முற்பதிவு கட்டமைப்புக்கு வழிநடத்தப்படுவதுடன், சௌகரியமான முறையில் முற்பதிவுகளை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படும்.

IOM இன் புலம்பெயர்வு சுகாதார பிரிவின் பிரதான புலம்பெயர்வு சுகாதார அதிகாரி சிமோனெட் டி அசிஸ் இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட மனித புலம்பெயர்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை வழங்க IOM தன்னை அர்ப்பணித்துள்ளது. eChannelling உடன் கைகோர்த்துள்ளதனூடாக, புலம்பெயர் பயணிகளுக்கு தமது வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னர் அவசியமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான முற்பதிவுகளை சுமுகமான முறையில் மேற்கொள்வதை எம்மால் உறுதி செய்யக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

மேலதிக தகவல்கள் மற்றும் பிரயாணத்துக்கு முன்னதான சுகாதார பரிசோதனைகளுக்குரிய இலவச ஒன்லைன் முற்பதிவுகளை அணுகுவதற்கு, eChannelling இணையத்தளத்துக்கு விஜயம் செய்யுமாறு நபர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X